site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

    Advertisements
  • Tamil

  • Movies Blog

    Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

  • Click here for Free Dubbed Movies Download

  • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

  • Tutorials

  • Visitors from Countries

    free counters
  • Blog Stats

    • 283,487 hits

சச்சினுக்கு பாரத ரத்னா: விதிகளை மாற்றியமைக்க வேண்டும்!

Posted by sambala87(சூரியன்) on April 11, 2011

இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டத்தில் உள்ள விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என சட்ட நிபுணர் சுபாஷ் காஷ்யப் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாகவே சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் உலகக் கோப்பையையும் வென்று இந்தியா சாதனை படைத்தது. அதனால் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை சச்சினுக்கு வழங்க வேண்டும் என்ற கருத்து மீண்டும் வலுக்கத் தொடங்கியுள்ளது.

1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் பாரத ரத்னா விருது இதுவரை 41 பேருக்கு வழங்கப்பட்டிருந்தாலும், இதுவரை விளையாட்டு வீரர்கள் யாருக்கும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து காஷ்யப் மேலும் கூறியிருப்பது: இப்போதுள்ள விதிகளின் அடிப்படையில் பாரத ரத்னா விருதைப் பெற சச்சின் தகுதியானவர் அல்ல, அதனால் விதிகளில் தேவையான மாற்றத்தைச் செய்ய வேண்டும்.

இப்போதுள்ள விதி, கலை, இலக்கியம், அறிவியல், சமூக சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் விளையாட்டு வீரர்கள் குறித்து அதில் குறிப்பிடப்படவில்லை.

விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கலாமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும். விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவது தொடர்பாக அமைச்சரவைக் குழுவிடம் அனுமதி கோரி தீர்மானம் கொண்டு வரவேண்டும்.

ஒருமுறை அமைச்சரவைக் குழு அனுமதி அளித்துவிட்டால் சச்சினுக்கு மட்டுமல்ல, எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் உள்துறை அமைச்சகம் பாரத ரத்னா விருதை வழங்கிவிடமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய கேப்டன் தோனி, யுவராஜ், ஹர்பஜன் சிங், வீரேந்திர சேவாக் ஆகியோரும் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: