site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கிராம மக்கள் ஓட்டுக்கு குறி…

Posted by sambala87(சூரியன்) on April 3, 2011

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தமிழகம் முழுவதும் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களைப் போலவே, இதில் பலனடையும் கிராமப்புற மக்களையும் ஓட்டு வங்கியாக மாற்றும் முயற்சியில் தி.மு.க.,வினர் முழுமூச்சாக களமிறங்கியுள்ளனர்.

ஏற்கனவே பெரியளவில் வேலை எதுவும் செய்யாமல், 50 ரூபாய், 80 ரூபாய் பெற்று வந்த கிராம மக்களுக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, சுளையாக 100 ரூபாய் கொடுக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில், வேலை எதுவும் செய்யாமலேயே இந்த தொகை வழங்கப்படுகிறது. கையில் சில பீடி இலைகளை எடுத்து வந்து, மர நிழலில் பீடி சுற்றிவிட்டு, மதிய உணவு நேரத்துக்கு வீடு திரும்பி விடும் அளவிலேயே நடைமுறை இருக்கிறது.

அவர்களிடம், “அந்தம்மா வந்தால், இந்த திட்டத்தையே நிறுத்தி விடும். தொடர்ந்து வேலை கிடைக்க வேண்டுமானால், மறக்காமல் நம் கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்’ என, நாள் தவறாமல் நேரில் சென்று வலியுறுத்தி வருகின்றனர் உள்ளூர் ஆளுங்கட்சியினர். இது நல்ல பலனை தந்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சியினர், தேர்தல் கமிஷனுக்கு புகார்களை தட்டிவிட்டுள்ளனர்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: