site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

எம்.ஜி.ஆர்., உருக்கம்….

Posted by sambala87(சூரியன்) on April 3, 2011

இது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பு : எம்.ஜி.ஆர்., உருக்கம் :

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில்,1974ம் ஆண்டு நடந்த திரைப்பட விழாவுக்கு போய்விட்டு, பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்ற எம்.ஜி.ஆர்., பி.பி.சி., தமிழோசைக்கு அளித்த பேட்டியிலிருந்து… என் இரண்டரை வயதில் தந்தை இறந்து விட்டார். என் தந்தையும், அவருக்கு உயிரூட்டிய, அறிவை தந்த பாட்டனாரும் பெரும் பணக்காரர்கள்; லட்சாதிபதிகள்; வசதியோடும், வாய்ப்போடும் இருந்தவர்கள்.

ஆனால், கேரளாவில் இருந்த, “மருமக்கள்தாயம்’ என்ற முறையால், குழந்தைகளுக்கு தந்தையின் சொத்து இல்லை என்ற காரணத்தால், நாங்கள் அனாதைகள் ஆக்கப்பட்டோம். என் தாயினுடைய அரவணைப்பில் தான் நான் வளர வேண்டி இருந்தது. என் தந்தை மாஜிஸ்திரேட்டாகவும், பிரின்ஸ்பாலாகவும் இருந்தார். பிரின்ஸ்பாலாக இலங்கையில் பணியாற்றும் போது, கண்டியில் தான் நான் பிறந்தேன். இரண்டரை வயதிலே தந்தையை இழந்தேன். அதன் பிறகு 5 வயதிலேயே நான் தமிழகம் வந்துவிட்டேன். என்னை வளர்த்த வேலு நாயர் என்பவர், போலீஸ்காரராக பணியாற்றியவர். அவர் ஆதரவிலே நாங்கள் வளர வேண்டி இருந்தது.

முதன் முதலாக நான் எழுத, படிக்க அறிந்த மொழி தமிழ். அறிவு வந்த பருவம் முதல் நான் பார்த்து, பழகிக் கொண்டிருக்கும் மக்கள் தமிழ் மக்கள். என் உடம்பிலே இத்தனை ஆண்டுகளாக குருதி வளர்ந்திருக்கிறது; சூடேறிக் கொண்டிருக்கிறது; சூடு தணியாமல் இருக்கிறது என்றால், நான் வளர்ந்திருக்கிறேன்; வாய்ப்பு பெற்றிருக்கிறேன் என்றால், அது தமிழ் கூறும் நல்லுலகம் தந்த வாய்ப்பு. ஆகவே, அந்த தமிழ் உலகத்திற்கு நான் தொண்டு செய்ய வேண்டுமென்ற ஆர்வம், என்னை அறியாமலே என்னை உந்தி தள்ளி கொண்டிருக்கிறது.

என் தாயுடைய அரவணைப்பில், எனக்கு அதிக கல்வியை தருவதற்கு வாய்ப்பில்லை. எனது 7வது வயதில், நாடக கம்பெனிகளில் சேர்ந்து விட்டேன். 7 வயதில் இருந்து நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தேன். கடந்த 1930ம் ஆண்டில், 29ம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் அங்கத்தினராக இல்லாவிட்டாலும், அதனுடைய ஊழியராக இருந்தேன். அதன்பின், 1933-34ல் அக்கட்சியின் அங்கத்தினராகப் பதிவு செய்து கொண்டேன். அங்கு செயல்பட்ட முறைகளில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் எண்ணியதால், விருப்பு வெறுப்பற்ற நிலையில் வளர வேண்டுமென்ற காரணத்தால், நான் விலகி, “அஞ்ஞானவாசம்’ இருப்பது போல், நான்கைந்து ஆண்டு காலம் அரசியலில் ஈடுபாடு இல்லாமல் இருந்தேன்.

ஆனால், கதர் கட்டும் காங்கிரஸ்காரனாக இருந்தேன். நான், எப்போதும் ஒரு தேசியவாதியாக இருப்பவன். அதுமட்டுமல்லாமல், மகாத்மாவின் கொள்கையில் பிடிப்பும், நம்பிக்கையும் கொண்டவன். அவை எல்லாம் ஒருங்கே சேர, நான் தமிழகத்தில் கண்ட ஒரே தலைவர் அண்ணாதுரையை தவிர வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, அவருடைய புத்தகங்களை படித்துவிட்டு, அவருடைய நியாயமான கோரிக்கைகள் தான் தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் நலன் பயக்கும் என்பதால் நான் தி.மு.க.,வில் இணைந்தேன்.

தி.மு.க.,விலிருந்து, 1972, அக்டோபர் 10ம் தேதி, குற்றமற்ற நான் வெளியேற்றப்பட்டேன். அதன்பின், தொண்டர்களுடைய, மக்களுடைய விருப்பப்படி அ.தி.மு.க., என்ற அமைப்பை உருவாக்கினேன். இப்போது, அதிலே முதல் தொண்டனாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படி முடிகிறது எம்.ஜி.ஆரின் 10 நிமிட பேட்டி.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: