site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கருத்துக் கணிப்புகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி

Posted by sambala87(சூரியன்) on April 1, 2011

தமிழ்நாடு சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக – தேமுதிக – கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி பெருவாரியான மக்களின் ஆதரவுடன் அமோக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே – ஹெட்லைன்ஸ் டுடே – மெயில் டுடே – ஓஆர்ஜி ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பும் அவுட் லுக் வார இதழும் எம்டிஆர்ஏ அமைப்பும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பும் தெரிவிக்கின்றன.
கடந்த சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளை அடிப்படையாக வைத்தும், இப்போதைய பிரச்னைகள் தொடர்பாக சில கேள்விகளுக்கு வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களின் அடிப்படையிலும் இந்தக் கணிப்பு நடைபெற்றுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல், விலைவாசி உயர்வு, இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு, அமைச்சர்கள் – அதிகாரிகள் நிலையில் காணப்படும் ஊழல் போன்ற காரணங்களால் திமுக தலைமையிலான கூட்டணியை எதிர்ப்பதாக கருத்துக்கணிப்பில் பங்கு கொண்டவர்களில் பெருவாரியானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 51% பேர் ஊழலை முக்கிய பிரச்னையாகக் கருதுகின்றனர். 34% பேர் அது பெரிய பிரச்னை இல்லை என்கின்றனர்.

முதல்வர் பதவிக்கு ஏற்றவர் ஜெயலலிதாவே என்று 37% பேரும் கருணாநிதியே என்று 34% பேரும் கருதுகின்றனர்.
கருணாநிதியின் அரசுதான் ஊழல் மிகுந்தது என்று 39% பேரும் ஜெயலலிதாவின் அரசுதான் ஊழல் அரசு என்று 21% பேரும் கூறினர்.

அலைக்கற்றை ஊழல் குறித்து தெரியும் என்று 51% பேரும், தெரியாது என்று 17% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அலைக்கற்றை ஊழலில் கருணாநிதி குடும்பத்தாருக்குத் தொடர்பு உள்ளது என்று 38% பேரும் இல்லையென்று 26% பேரும் நினைக்கின்றனர்.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அந்த விவகாரத்தை சரியாகக் கையாள கருணாநிதி அரசு தவறிவிட்டது என்று 41% பேரும் சரியாகத்தான் கையாண்டது என்று 25% பேரும் கருதுகின்றனர். விலைவாசி உயர்வு தங்களை பாதிக்கும் பிரச்னை என்று 59% பேரும், இது முக்கிய பிரச்னையே இல்லை என்று 29% பேரும் கருத்து தெரிவித்தனர்.

2009 மக்களவை பொதுத் தேர்தலில் நடந்த வாக்குப்பதிவு அடிப்படையில் ஹெட்லைன்ஸ் டுடே ஓஆர்ஜியின் கருத்துக் கணிப்பு முடிவு வருமாறு:

2009 மக்களவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 37% வாக்குகள்தான் கிடைத்தன, திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு 43% வாக்குகள் கிடைத்தன.
இப்போது நடைபெறவுள்ள சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 50% வாக்குகளும் 164 தொகுதிகளும் கிடைக்கும்.
திமுக கூட்டணிக்கு 45% வாக்குகளும் 68 தொகுதிகளும் கிடைக்கும்.
மற்றவர்களுக்கு 5% வாக்குகளும் 2 தொகுதிகளும்தான் கிடைக்கும்

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: