site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

 • Tamil

 • Movies Blog

  Visit http://www.freetamildubbedmovies.com for free Tamil Dubbed Movies download .

 • Click here for Free Dubbed Movies Download

 • மேலும் சுவையான செய்திகளை தமிழில் வாசிக்க…

 • Tutorials

 • Visitors from Countries

  free counters
 • Blog Stats

  • 285,544 hits
 • Advertisements

சூரியசக்தி மின்சாரம்…..

Posted by sambala87(சூரியன்) on April 1, 2011

சூரியசக்தியிலிருந்து மின்சாரம் என்கிற முயற்சிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஜப்பானை சமீபத்தில் தாக்கிய ஆழிப்பேரலையும், அதன் விளைவால் கடலோரமாக அமைந்திருந்த அணுமின் நிலையங்களின் அணு உலைகள் வெடித்துச் சிதறி பேராபத்து காற்றில் கலந்திருப்பதும் உலகுக்கே விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை.

ஜப்பான் மட்டுமல்ல, ஜப்பானைச் சுற்றியுள்ள உலக நாடுகளும் பயத்தில் உறைந்து போயிருக்கின்றன. கடல்நீரில் அணுக் கதிர்வீச்சு கலந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் பயப்படுகிறார்கள். வெடித்துச்சிதறிய புகுஷிமா அணு உலையை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில், பசிபிக் கடல்நீரில் அயோடின் 131 என்கிற அணுக்கதிர்வீச்சின் அளவு, அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1,250 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது.

குடிநீரில் கதிரியக்கப் பாதிப்பு இருக்குமோ என்கிற அச்சம். காற்றில் கலந்திருக்கும் கதிர்வீச்சு அபாயத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முகத்தில் துணியைக் கட்டிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதுதான் ஜப்பானின் இன்றைய நிலைமை. இதற்குப் பிறகும் நாம் அணுமின் சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரித்து சொகுசு வாழ்க்கை வாழத்தான் வேண்டும் என்றால் அதைவிடப் பைத்தியக்காரத்தனம் நிச்சயமாக இருக்க முடியாது.

நமது தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் எண்ணெய்வளம் கிடையாது. நமது தேவைக்கெல்லாம் பெட்ரோலிய எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு நாமொன்றும் அளவுக்கு அதிகமான அந்நியச் செலாவணி உள்ள நாடாக இல்லை. இந்த நிலையில், நமக்கு இருக்கும் வழிகள் இரண்டுதான். ஒன்று, முடிந்தவரை அநாவசியமாக எரிபொருளை வீணாக்கக்கூடாது என்கிற சிக்கன உணர்வை மக்களுக்கு ஊட்டுவது. இரண்டாவது, மரபுசாரா எரிசக்தியின் மூலம் தனிப்பட்ட குடும்பங்களின் மின்சாரத் தேவைகளை எதிர்கொள்வது.

தேவைக்கு அதிகமாக மோட்டார் வாகன உற்பத்தியை அரசே ஊக்குவிக்கிறது. வசதிகள் நிறைந்த பொதுப் போக்குவரத்தைக் குறைந்த செலவில் இயக்கி, தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது என்கிற அடிப்படைக் கடமையைச் செய்யக்கூட அரசு தயங்குகிறது. ஆட்சியில் இருப்பவர்களும், அரசியல் கட்சிகளும் மின்சார விரயத்தில் ஈடுபடுவதைத் தவிர்த்து மக்களுக்கு வழிகாட்டுவதற்குப் பதிலாக, தேவைக்கதிகமான கார்களில் பவனி வருவதும், அளவுக்கதிகமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டப் பேரணி நடத்துவதுமாகப் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடாமல் பொதுமக்களுக்கு மின்சாரச் சிக்கனத்தின் இன்றியமையாமையைப் புரிய வைக்க வேண்டும்.

கிராமங்களில் மாடு வைத்திருக்கும் விவசாயிகளின் வீட்டிலெல்லாம் சாணஎரிவாயு தயாரிப்பது உறுதிப்படுத்தப்பட்டாலே, பல லட்சம் குடும்பங்களின் எரிவாயுத் தேவை தீர்க்கப்படும். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதுபோல, மானிய விலையில் சூரியசக்தி மின்சாரம் ஒவ்வொரு வீட்டின் தேவையையும் பூர்த்தி செய்யுமானால், மிகப்பெரிய அளவில் நமது மின்தேவை பூர்த்தி செய்யப்பட்டு விடும்.

இந்தியாவின் நிலப்பரப்பில் 70% பகுதிகள், குறிப்பாகத் தென்னிந்தியா, ஆண்டின் பெரும்பான்மையான நாள்களில் சூரியசக்தி மின்சாரம் அதிக அளவில் தயாரிக்க ஏதுவான பகுதி என்று கூறப்படுகிறது. முனைப்பான அரசுத் திட்டங்களும், தகுந்த மானியமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டால் 2020-க்குள் இந்தியாவின் மின்தேவையில் 20% சூரியசக்தி மின்சாரத்தின் மூலம் பெற முடியும் என்கிறது உலக வங்கி. இதற்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கவும் உலக வங்கி தயாராக இருக்கிறது.

உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் மின்வெட்டு அவதியால் மக்கள் சலித்துக் கொண்ட காலம் இப்போது மலையேறி வருகிறது. நகர்ப்புற மக்கள்தான் மின்வெட்டு என்று கவலைப்படுகிறார்களே தவிர, கிராமப்புறங்களில் அந்தப் பிரச்னை அதிகமாக இல்லை. நமது ஊரில் கேட்பதுபோல, ரொக்கமும், நகையும் எல்லாம் அங்கே வரதட்சிணையாகக் கேட்கப்படுவது கிடையாது. தண்ணீர் பாய்ச்ச மோட்டார்கள், தொலைக்காட்சிப் பெட்டி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் இவற்றுடன் சூரியசக்தி மின்சாரத்துக்கான கருவியும் எல்லா சீர்வரிசைப் பட்டியலிலும் இடம்பெற்று விடுகிறது.

மின்சார வசதியே இல்லாத 45% கிராமப்புறப் பகுதிகளில், நம் அளவுக்குப் பொருளாதார வளர்ச்சியோ, கல்வியறிவோ இல்லாத உத்தரப் பிரதேசமும், பிகாரும் சூரியசக்தி மின்சாரத்தின் மூலம் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. குஜராத்தில் 1,500 ஹெக்டேர் பரப்பில் சூரியசக்தியில் 2,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. வட மாநிலங்களில் பல பகுதிகளில், நீர்பாய்ச்சுவதற்கான மோட்டார்களை இயக்க விவசாயிகள் சூரியசக்தி மூலம் மின்சாரம் தயாரித்துக் கொள்கிறார்கள். நாம்தான் மிகவும் பின்தங்கி விட்டிருக்கிறோம்.

தங்குதடையில்லாமல் மின்சாரம் வழங்குவதன் மூலம் குழந்தைகள் படிப்பதற்கு ஊக்கம் கிடைப்பதாகவும், குறைந்தபட்சம் பள்ளி இறுதித்தேர்வுவரை படிக்கத் தடையில்லாத மின்சாரம் ஒரு தூண்டுகோல் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் வளர்ச்சி நிதி நடத்திய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இப்போதாவது சூரியசக்தி மின்சாரம் தேர்தல் வாக்குறுதியாக வெளிச்சம் போடப்பட்டிருக்கிறதே, அதுவரை மகிழ்ச்சி!

( சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கு முக்கியத்துவம் தரப்படும் என ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் சூரிய மின்சக்தி மூலம் ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய 18 கோடி ரூபாய் செலவாகும். இது நடைமுறைக்கு ஒத்துவருமா?…. )

(di)

Advertisements

One Response to “சூரியசக்தி மின்சாரம்…..”

 1. ksathish said

  வழங்குவதன் மூலம் குழந்தைகள் படிப்பதற்கு ஊக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: