அப்பாடா., மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தது!

இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இத்துடன் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு களுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற அளவில் விகிதாச்சாரம் மிக குறைந்து அமைந்துள்ளது என சென்சஸ் விவரத்தில் தெரியவந்துள்ளது.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை – 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.

சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது. உலக மொத்த மக்கள் த‌ொகையில் இந்தியா 17. 5 சதவீதம் இந்தியாவில் வசிக்கின்றனர். உலக மக்கள் தொகையில் சீனா மக்கள் தொகை 19.4 சதம் ஆகும்.

5 நாட்டு மக்கள் தொகையை விட இந்தியா டாப்: மொத்தம் 74. 25 சதவீத பேர் கல்வியறிவு பெற்றவர்கள் ஆவர். இதில் கல்வியறிவு பெற்றவர்களில் பெண்களைவிட ஆண்கள் முன்னணியில் உள்ளனர். அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் கூட்டு மக்கள் தொகை எவ்வளவோ அதனை விட இந்தியா மக்கள் அதிகம் பெற்றுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் பெற்றது ஆகும். உ. பி., மகாராஷ்ட்டிரா மாநில கூட்டு மக்கள் தொகை அமெரிக்காவை விட அதிகம்.

அதிக மக்கள் நெருக்கம் தில்லியின் வடகிழக்கில் உள்ளது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 37,346 பேர் அங்கு உள்ளனர். குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சலப் பிரதேசத்தின் திபங்க் பள்ளத்தாக்கில் உள்ளது. அங்கு ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒருவர் மட்டுமே உள்ளார்.

பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளதை மக்கள்தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. கணக்கெடுப்பின்படி சமீபத்திய குழந்தைகள் விகிதம் 1000 ஆண்களுக்கு 914 பெண்களாக உள்ளது. இது சுதந்திரம் அடைந்ததில் இருந்து மிகக் குறைவான விகிதமாகும்.

மொத்த மக்கள்தொகையில் 7 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரில் 74 சதவீதம் பேர் படித்தவர்கள் . 26 சதவீதம் பேர் படிக்காதவர்கள்.

2001-ல் படித்தவர்கள் 64.83 சதவீதமாக இருந்த படித்தவர்களின் விகிதம், 2011-ல் 74.04 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது படித்தவர்களின் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

அமெரிக்கா. இந்தோனேசியா, பிரேசில், பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகையும் சீனாவின் மக்கள்தொகையும் ஏறக்குறைய சமமாக இருக்கும் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s