site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதைத் தடுக்க பல கோடி பேரம்: விஜயகாந்த்

Posted by sambala87(சூரியன்) on March 27, 2011

அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி சேருவதைத் தடுக்க பல கோடி பேரம் பேசப்பட்டது என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.

சென்னை, எழும்பூர் (தனி) தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து புரசைவாக்கம் பிரிக்லின் சாலையில் விஜயகாந்த் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க.வை ஓரம்கட்டவும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதைத் தடுக்கவும் பல்வேறு முயற்சிகளை ஆளும் கட்சியினர் மேற்கொண்டனர். உளவுப் பிரிவு போலீஸ் என பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டனர்.

பள்ளிப் பருவம் முதல் என்னுடன் படித்துப் பழகியதுபோல், என்னைப் பற்றி தன்மானம் உள்ளவர் என்றெல்லாம் மு.க.அழகிரி அறிக்கைவிட்டு முயற்சித்துப் பார்த்தார்.

நான் நினைத்திருந்தால் பல கோடிகளைப் பார்த்திருக்க முடியும். அதற்கான வாய்ப்பும் வந்தது.

இதற்கெல்லாம் பணிந்திருந்தால், இப்படி உங்கள் முன் வந்து நின்றிருக்க மாட்டேன்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என கருணாநிதி முழங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ள திரைப்பட நிறுவனங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்படுகின்றன.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதுதான் கருணாநிதியின் தாரக மந்திரம் என்றார்.

அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானது: சென்னை, கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமியை ஆதரித்து திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில் விஜயகாந்த் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை பிரதானமாகக் கொண்டு அரசியல் நடத்தியவர் அண்ணா. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டியவர் அவர். ஆனால், அண்ணாவின் தம்பிகள் என்று கூறிக் கொள்ளும் தி.மு.க.வினர் இன்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். இது அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிரானது.

கட்சியைப் பாதுகாப்பதற்கோ, தொண்டர்களின் நலன்களுக்காகவோ காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க.வினர் கூட்டணி அமைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் குடும்ப நலன்களுக்காகவே இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போரின்போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கொளத்தூரைச் சேர்ந்த இளைஞர் முத்துக்குமார் தீக்குளித்து உயிரிழந்தார்.

ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ய தி.மு.க. தலைவர் கருணாநிதி துணை போனார். எனவே, முத்துக்குமாரின் ஆவி தி.மு.க.வினரை மன்னிக்கப் போவதில்லை என்றார் விஜயகாந்த்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: