site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

வேட்பாளர்கள் சொத்து பட்டியல்

Posted by sambala87(சூரியன்) on March 26, 2011

காங்.,)மதுரை:திருப்பரங்குன்றம் காங்., வேட்பாளர் சி.ஆர்.சுந்தரராஜன் நேற்று மனுத்தாக்கல் செய்தபோது அளித்த சொத்து விபரம்: கையிருப்பாக ரூ. 17 ஆயிரத்து 500 உள்ளது. ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் ரூ. 26 ஆயிரத்து 970, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ. 20 ஆயிரத்து 925, அதே வங்கியில் தேர்தல் வைப்பு நிதியாக ரூ. 50 ஆயிரம்.அசையும் சொத்துக்களாக ரூ. 97 ஆயிரத்து 895ம், மதுரை மாடக்குளம் மற்றும் சிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தில் விவசாய நிலங்கள், கட்டடங்கள் என அசையா சொத்துக்களாக ரூ. 31 லட்சத்து 70 ஆயிரத்து 400ம் உள்ளது என தெரிவித்துள்ளார். வழக்குகள் எதுவும் கிடையாது. அவரது மனைவி பெயரில் கையிருப்பாக ரூ. 12 ஆயிரம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இருப்பு ரூ. 20 ஆயிரம், 400 கிராம் (பழைய) தங்க நகையின் மதிப்பு ரூ. 65 ஆயிரம் உள்ளது. மகன் பெயரில் கையிருப்பு ரூ. 21 ஆயிரம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் ரூ. 15 ஆயிரத்து 227, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ரூ. 13 ஆயிரத்து 394, அதே வங்கியில் ரூ. 18 ஆயிரத்து 755ம் உள்ளது. இந்தியா பர்ஸ்ட் லைப் இன்சூரன்ஸில் ரூ. 25 ஆயிரத்திற்கான பாலிசியும் உள்ளது.

தே.மு.தி.க., வேட்பாளர்: திருப்பரங்குன்றம் தே.மு.தி.க., வேட்பாளர் ஏ.கே.டி.,ராஜா தாக்கல் செய்த சொத்து மதிப்பு விபரம்: கையிருப்பு ரூ. 70 ஆயிரம். உசிலம்பட்டி இந்தியன் வங்கியில் ரூ. 5752. திருப்பரங்குன்றம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 50 ஆயிரம். டாடா சுமோ கார் மதிப்பு ரூ. 1.20 லட்சம் என அசையும் சொத்துக்களாக ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்து 752 உள்ளது. தொட்டப்ப நாயக்கனூரில் விவசாய நிலம், சொட்டு நீர்ப்பாசனம், வணிக கட்டடங்கள், குடியிருப்பு வீடுகள் என அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ. 20 லட்சத்து 84 ஆயிரத்து 750. சொட்டு நீர்ப்பாசனம், அலங்காநல்லூர் ராஜ்ஸ்ரீசுகர் மில் கரும்புலோன் என ரூ. 1.75 லட்சம் உள்ளது. வழக்குகள் ஏதும் கிடையாது. அவரது மனைவி ராணியின் கையிருப்பு ரூ. 10 ஆயிரம். தங்கநகை 240 கிராம் மதிப்பு ரூ. 4 லட்சத்து 8 ஆயிரம். அவரது தாயார் ஒச்சம்மாள் கையிருப்பாக ரூ. 20 ஆயிரம், 40 கிராம் தங்கநகை மதிப்பு ரூ. 68 ஆயிரம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

மதுரை தெற்கு அண்ணாதுரை மதுரை தெற்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் அண்ணாதுரை தாக்கல் செய்துள்ள சொத்து விபரம்: அவரிடம் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் ஒன்று, வங்கி இருப்பு ரூ.37 ஆயிரம் உட்பட ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 239 மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 121 மதிப்புள்ள நகைகள், கோச்சடையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஒத்திவீடு. மதுரை பி.ஆர்.சி., நகரிலும், சோளங்குருணியிலும் ரூ.78 ஆயிரம் மதிப்புள்ள மனைகள், மகன் செந்தில்குமார் பெயரில் ரூ.48 ஆயிரம் மதிப்புள்ள டூவீலர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மதுரை தெற்கு சாந்தாராம் (ஜனதா)மதுரை தெற்கில் பா.ஜ., சின்னத்தில் போட்டியிடும் ஜனதா கட்சி வேட்பாளர் சாந்தாராமிற்கு ரூ.3.73 லட்சம் சொத்து இருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். சாந்தாராமிடம் கையிருப்பு ரூ.25 ஆயிரம். வங்கி இருப்பு ரூ.55 ஆயிரம் மற்றும் ரூ.33 ஆயிரம் மதிப்புள்ள இரு டூவீலர்கள். மனைவி மாலினியிடம் இருப்பு ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள 20 பவுன் நகைகள்.

மதுரை கிழக்கு தமிழரசன் (அ.தி.முக.,) மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் கே.தமிழரசன் தாக்கல் செய்துள்ள சொத்துப்பட்டியல்: என் பெயரில் 7.76 லட்சம் ரூபாய், மனைவி பெயரில் 5.45 லட்சம் ரூபாய் கையிருப்பு உள்ளது. மனைவி பெயரில் சுமோ கார், 10.12 லட்சம் ரூபாய் மதிப்பில் 785 கிராம் தங்க நகைகள், 40 ஆயிரத்து 883 ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 500 கிராம் வெள்ளி நகைகள் உள்ளன. பதினெட்டாங்குடியில் என் பெயரில் 11 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 2 ஏக்கர் 35 சென்ட் விவசாய நிலம், மனைவி பெயரில் 19 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் 3 ஏக்கர் 88 சென்ட் விவசாய நிலம் உள்ளது. மேலூரில் என் பெயரில் வணிக கட்டடம், டீக்கடை 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மனைவி பெயரில் மேலூரில் 440 சதுரடி பரப்பில் வணிக கட்டடம்3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளன. மேலூரில் என் பெயரில் 2, 270 சதுரடி வீடு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ளது. அசையா சொத்துக்கள் என் பெயரில் மொத்தம் 73 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய், மனைவி பெயரில் 23 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பில் உள்ளன. வங்கியில் என் பெயரில் வீட்டு கடன் 11லட்சத்து 82 ஆயிரத்து 629 ரூபாய், மனைவி பெயரில் கார் கடன் 5 லட்சத்து 6 ஆயிரத்து 24 ரூபாய் உள்ளது. எட்டாம் வகுப்பு முடித்துள்ளேன். என் மீது எந்த வழக்குகளும் இல்லை, என குறிப்பிட்டுள்ளார்.

மதுரை வடக்கு குமாரலிங்கம் (பா.ஜ.,) மதுரை வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் எம். குமாரலிங்கம் தாக்கல் செய்த சொத்து விபரம்: தனது பெயரில் எஸ்.பி.ஐ., வங்கியில் மூன்று லட்சம் ரூபாய். தனது பெயரில் இரண்டு கார்கள் உட்பட 6 லட்சத்து 65 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள். தனது பெயரில் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள். தனது பெயர் மற்றும் மகன் பெயரில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம். மனைவி பெயரில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள். மனைவி பெயரில் எட்டு லட்சத்து 7,198 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகள் என மொத்தம் ஒரு கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், நகைக்கடன் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், வீட்டு கடன் ஆறு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உசிலம்பட்டி ராமசாமி (தி.மு.க.,)
உசிலம்பட்டி தி.மு.க., வேட்பாளர் ராமசாமி தாக்கல் செய்த சொத்து விபரம்: ராமசாமியிடம் ரொக்கப்பணமாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரமும், அவரது மனைவி அங்கம்மாளிடம் ரூ.50ஆயிரமும் உள்ளதாகவும், பாங்கில் ரூ.12 லட்சத்து 43ஆயிரத்து 267 ரூபாய் உள்ளது. நான்கு டிராக்டர்கள், ஒரு மாருதி வேகன், ஒரு பஜாஜ் பிக்கப் வேன் உள்ளதாகவும், மனைவியிடம் 800கிராம் நகைகள் என அசையும் சொத்துக்களாக ரூ.44லட்சத்து 22ஆயிரத்து455 ம், மனைவியிடம் ரூ.17 லட்சத்து 50ஆயிரம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அசையாச் சொத்துக்களாக தனது பெயரில் ரூ.42 லட்சத்து 31ஆயிரத்திற்கும், மனைவி பெயரில் 65 லட்சரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினர்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டுள்ள ராமசாமி தன்னை சார்ந்தவர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

(dm)

One Response to “வேட்பாளர்கள் சொத்து பட்டியல்”

  1. pandian said

    where i can get all nominees details and their சொத்து விபரம்?
    is there any site?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: