site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

விஜயகாந்த் சொத்து ரூ.20 கோடி : மனைவி, மகனிடம் ரூ.8 கோடி

Posted by sambala87(சூரியன்) on March 26, 2011

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு 20 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரது சொத்து பட்டியல்: அசையும் சொத்து: கையிருப்பாக 6 லட்ச ரூபாய்; மனைவி கையிருப்பு 6 லட்சம்; வங்கி வைப்பு நிதி 1.56 லட்சம் ரூபாய்; ஆண்டாள் அழகர் மண்டபம், கேப்டன் பார்ம் லிட்., பங்குகளாக 3 கோடியே 68 லட்சம் ரூபாய்; கேப்டன் மீடியா நிறுவன பங்கு 10 கோடி ரூபாய்; சொனாடா கார், டெம்போ டிராவலர், போர்ட் எண்டவர் வாகனங்கள் உள்ளன. தங்க நகைகள் 612 கிராம், மனைவியிடம் 828 கிராம் உள்ளது.

அசையும் சொத்து: தன் பெயரில், 9 கோடியே 4 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயும், மனைவி பெயரில் 1.28 கோடி ரூபாயும் வைத்துள்ளார். அசையா சொத்து: மதுராந்தகம் கரடிப்புத்தூர் இருகூர் பகுதியில் 12.46 கோடி ரூபாய் மதிப்பில் 61 ஏக்கர், மனைவி பெயரில் 8.47 கோடி ரூபாய் மதிப்பில் 39 ஏக்கர், மகன் பெயரில் 43 லட்சம் ரூபாய் மதிப்பில் 32 ஏக்கர் நிலம். விவசாய மற்ற நிலங்களாக விஜயகாந்திற்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மதிப்பிலும், மனைவி பெயரில் 4 கோடியே 43 லட்சமும் உள்ளது.

வணிக கட்டடங்கள் 6 கோடியே 87 லட்சம் ரூபாய்; குடியிருப்பு கட்டடங்கள் ஒரு கோடியே 61 லட்ச ரூபாய். மொத்தமாக விஜயகாந்த்திற்கு 19.8 கோடி ரூபாய், மனைவிக்கு 6.5 கோடியும், மகனிற்கு 1.2 கோடியும், மற்றொரு மகன் பெயரில் 28 லட்சமும் சொத்துக்கள் உள்ளன.

கடன்: விஜயகாந்த் செலுத்த வேண்டிய வரி பாக்கிகள் மற்றும் கடனாக 7 கோடியே 52 லட்சமும், வங்கிக் கடனாக 2 கோடியே 54 லட்ச ரூபாயும் உள்ளது.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: