இலவச அறிவிப்பில் கழகங்கள் : ஓட்டாக மாறுமா கிரைண்டரும், மிக்சியும்?

தி.மு.க., – அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில், அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என, இலவசங்களை அள்ளி விட்டுள்ளன. ஆனால், இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றனவா?

தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கருதப்படுகின்றன. ஆனால், அந்தக் கட்சிகளே, தங்களை நம்பாமல், இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. கடந்த வாரம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க.,வும் சரி, நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க.,வும் சரி, தங்கள் தேர்தல் அறிக்கையில், பொதுமக்களை பிச்சைக்காரர்கள் ஆக்கும் வகையில், பல்வேறு இலவசத் திட்டங்களை வாரி இறைத்துள்ளன. இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து திரட்டப்படும் என்ற கேள்விக்கு, இரு தரப்பிலுமே, “வழவழ’ பதில் தான் கிடைக்கிறது.

இவற்றுக்கெல்லாம் ஆரம்பம், 2006ம் ஆண்டு தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான். அதுவரை வெறும் சம்பிரதாயமாகவே இருந்த தேர்தல் அறிக்கை, சுனாமியைப் போல, மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரேஷனில் கிலோ அரிசி இரண்டு ரூபாய், விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசம், ஏழைகளுக்கு இலவச, “டிவி’ என, அறிவித்தது. வழக்கம் போல் தேர்தல் அறிக்கை வெளியிட்ட அ.தி.மு.க., பதறியடித்து, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் என, தன் பங்குக்கு இலவச அறிவிப்பை வெளியிட்டது.

கடந்த, 2006 தேர்தலில், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதற்கு காரணம், அக்கட்சியின் இலவச அறிவிப்பு தான் என்ற பேச்சு எழுந்தது. பிரதான கட்சிகளும் அப்படித் தான் நினைக்கின்றன என்பதை, அவ்விரு கட்சிகளின் தற்போதைய தேர்தல் அறிக்கை உணர்த்துகிறது. உண்மை அது தானா? இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன என்றால், 2006 சட்டசபை தேர்தலில், 232 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., “வீடு தேடி ரேஷன் பொருட்கள், அனைவருக்கும் வேலை, வேலையற்ற பட்டதாரிகளுக்கு நிதி, ஒவ்வொரு வீட்டிற்கும் குடும்பச் செலவிற்கு ரொக்கம்’ என, வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் தான், “ஹிட்’டாகி, அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தியிருக்க வேண்டும்.

அக்கட்சியோ 8.32 சதவீத ஓட்டுகளைப் பெற்று, ஓர் இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. “டிவி’யை விட அதிக விலை கொண்ட கம்ப்யூட்டர், தாலிக்குத் தங்கம் போன்ற அறிவிப்புகளை வெளியிட்ட அ.தி.மு.க., வெற்றி பெற்று, அந்தக் கட்சி ஆட்சி அமைத்திருக்க வேண்டும். அதுவும் நடக்கவில்லை. மாறாக, 69 தொகுதி களில் மட்டுமே வெற்றி பெற்றது. மறுபக்கம், தி.மு.க., 26.4, காங்கிரஸ் 8.38, பா.ம.க., 5.55, மார்க்சிஸ்ட் 2.64, இந்திய கம்யூனிஸ்ட் 1.59 சதவீத ஓட்டு என, வலுவான கூட்டணியுடன் போட்டியிட்ட தி.மு.க., அணி 44.56 சதவீத ஓட்டுகளைப் பெற்று, 163 தொகுதிகளை அள்ளியது. இந்தக் கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்துமே, வலுவான அடித்தளமும், ஆள்பலமும் கொண்டவை.

அ.தி.மு.க., அணியில், அக்கட்சியைத் தவிர, சொல்லிக் கொள்ளும்படியாக ம.தி.மு.க., மட்டுமே இருந்தது. “இதிலிருந்தே, தேர்தல் வெற்றிக்கு காரணம் கூட்டணி பலம் தானே தவிர, இலவச அறிவிப்பில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடியும்’ எனக் கூறும் அரசியல் பார்வையாளர்கள், மேலும் கூறியதாவது: இலவசங்கள் தான் வெற்றி, தோல்வியை தீர்மானித்திருக்கும் என்றால், குறைந்தபட்சம், தி.மு.க., வாவது அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்; அதுவும் நடக்கவில்லை.

கூட்டணிக் கட்சிகளை நம்பியே ஐந்தாண்டு கால ஆட்சியை ஓட்ட வேண்டியிருந்தது. கடந்த ஆண்டு பீகார், அதற்கு முந்தைய ஆண்டு குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் தி.மு.க.,வைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி, இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. குஜராத் முதல்வர் மோடியோ, “ஓசி டிவிக்கு வரி விதிப்பேன்’ என, அதிரடியாக மிரட்டினார். நிதிஷ் குமாரோ, “வளர்ச்சி அரசியலைத் தவிர வேறு பேச்சில்லை’ என்றார். அந்தத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

(dm)

Advertisements

One thought on “இலவச அறிவிப்பில் கழகங்கள் : ஓட்டாக மாறுமா கிரைண்டரும், மிக்சியும்?”

 1. இரண்டு அறிக்கைகளிலும் உள்ள மிக்சி,கிரைண்டர்கள் ஓட்டாக மாறா.காரணம் அவை தன்மானத்துடன் உயிர்வாழ அவசியமானவையோ
  அல்லது அத்தியாவசியமானவையோ அல்ல.
  ஆனால் அதிமுக அறிக்கையிலுள்ள கீழ்க்கண்டவைகள், தற்போதைய கால கட்டத்தில், குறிப்பிட்ட சமுதாயப் பிரிவினர் உழைத்துத் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ அரசு கொடுக்கும் உதவிக்கரம் என்று கருதப்படுகின்றன-
  *நுண்ணிய வேளாண்மை திட்டத்தை செம்மைப்படுத்தி, அதன்மூலம் விவசாயிகளை பங்குதாரர்களாக கொண்ட விவசாய நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு, சொட்டு நீர்ப்பாசன வசதி அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்.
  * * வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மூன்று லட்சம் மக்களுக்கு 300 சதுர அடியில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் 40 லட்சம் நடுத்தர வகுப்பு மக்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மான்யத்துடன் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
  * வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு வீடுகட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும்.
  * வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வீடுகளுக்கு சூரிய ஒளிமூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
  * பால் உற்பத்தியை தினமும் 2.5 மில்லியன் லிட்டரிலிருந்து 10 மில்லியன் லிட்டராக பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வகையில் தமிழகத்திலுள்ள 6,000ம் கிராமங்களில் 60 ஆயிரம் கறவை மாடுகள் இலவசமாக வழங்க வழிவகை செய்யப்படும்.
  * இலவச திட்டங்கள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் முகாம்களுக்கும் நீடிக்கப்படும்.
  * 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர், பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு பஸ்களில் சென்று வர இலவச பஸ்பாஸ் வழங்கப்படும்.
  * ஒவ்வொரு யூனியன் பகுதிகளிலும் முதியோர், ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் தங்க சிறப்பு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். அங்கு தங்குவோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும். மேலும் அங்கு புத்தக நிலையம், தியான மண்டபம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
  * அனைவருக்கும் குறைந்த விலையில், சூரிய வெளிச்சம், காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.
  * கிராமம்தோறும் நடமாடும் மருத்துவமனை கிராமத்துக்கே வரும் உன்னத திட்டம் செயல்படுத்தப்படும் 1500 கிராமங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தொலைதூர மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும்.
  * பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக 4 சீருடைகளும், காலணிகளும் வழங்கப்படும்.
  * கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு உதவும் வகையில் வழங்க இருந்த விவசாயக் கருவிகளை, தி.மு.க. அரசு கொடுக்க மறுத்ததால் அத்தொழிலாளர்களுக்கு உதவுகிற வகையில் மீண்டும் விவசாயக் கருவிகளை வழங்குவோம்.
  * வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள அடித்தட்டு குடும்பங்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். கால்நடை வளத்தைப் பெருக்கும் வகையில் இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும்.
  * தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்கு வேலை வாய்ப்பு பெருகி உள்ள துறைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்களாக உருவாக்கப்படுவர்.
  * திருநங்கைகளுக்கான சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும்.
  * அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சாரம் தடையில்லாமல் வழங்கப்படும். மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
  அதிமுகவின் தேர்தல் அறிக்கை (திமுகவின் ‘யாசக மற்றும் சொதப்பல்’அறிக்கையை விட) முற்போக்கானது.

  சென்ற ஆட்சியின் இலவச அலங்க்கோலமான (திமுக சொல்ல மறந்த)ரூபாய் ஒரு லட்சம் கோடி கடனை அடைத்து தமிழகத்தைத் தலை நிமிர வைப்பதாக அதிமுக அறிக்கை சவாலாக எதிர்கொள்கிறதே,
  இதை வாக்காளர்கள் பெருமையாக உணர்கிறார்கள்.
  தற்போது நாடு சிரிக்க, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கும்-
  கொலை/கொள்ளை/சிறுவர் கடத்தல்- ஆகியவைகளை நிறுத்தி முடிவுக்குக் கொண்டுவர(திமுக அறிக்கையில் சொல்ல மறந்த)அதிமுக அறிக்கையில் திட்டமாவது சொல்லப்பட்டிருக்கிறதே.
  இவை நிச்சயம் அதிமுகவின் இலவசங்க்களை ஓட்டாக மாற்ற வல்லவை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s