site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஆஸி.,க்கு விழுந்தது “அடி’!

Posted by sambala87(சூரியன்) on March 20, 2011

34 போட்டிக்கு பின்…

உலக கோப்பை அரங்கில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 34 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. கடைசியாக, கடந்த 1999ல் நடந்த உலக கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. இத்தோல்விக்கு பைனலில் ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்தது.

* ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், கடந்த 2003ல் நடந்த உலக கோப்பை தொடரில் முதன்முதலில் கேப்டனாக களமிறங்கினார். இவர், உலக கோப்பை அரங்கில் தொடர்ந்து 27 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் 100 சதவீத வெற்றிக் கேப்டனாக வலம் வந்தார். ஆனால் நேற்று பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்ததன்மூலம், உலக கோப்பை வரலாற்றில் பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

காலிறுதியில் இந்தியா-ஆஸி.,?

உலக கோப்பை தொடரின் காலிறுதியில் இம்முறை இந்தியா-ஆஸ்திரேலியா அல்லது இந்தியா-இலங்கை அணிகள் மோத வாய்ப்பு உள்ளது.
* வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி 9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடிக்கும். இதன்மூலம் காலிறுதியில் இந்திய அணி, “ஏ’ பிரிவில் 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் மோதும்.
* ஒருவேளை வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தோல்வி அடையும் பட்சத்தில், இந்திய அணி 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடிக்கும். இதன்மூலம் காலிறுதியில் இந்தியா, “ஏ’ பிரிவில் 2வது இடத்தில் உள்ள இலங்கையை எதிர்கொள்ள நேரிடும்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: