site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

அ.தி.மு.க கூட்டணியில் சி.பி.எம். 12, சி.பி.ஐ. 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

Posted by sambala87(சூரியன்) on March 14, 2011

அஇஅதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஎம்)க்கு 12 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(சிபிஐ)க்கு 10 தொகுதிகளும் ஒதுக்கப்படுவதாக திங்களன்று அறிவிக்கப்பட்டது.

வைகோவின் மதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு மட்டும்தான் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை. அதன் பிறகே அதிமுக போட்டியிடவிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இது தவிர மாநிலங்களவையில் ஒரு இடமும் தரப்பட்டது. போட்டியிட்ட 10 இடங்களில் 6 இடங்களில் சிபிஐ வென்றது.

அதிமுக கூட்டணியில் இதுவரையான தொகுதிப்பங்கீடு: தேமுதிக – 41, சிபிஎம் – 12, சிபிஐ – 10, மனித நேய மக்கள் கட்சி – 3, புதிய தமிழகம் , அகில இந்திய சமத்துவ் மக்கள் கட்சி – தலா 2, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை – தலா 1.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் சிபிஎம்மிற்கு 13 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 9 இடங்களில் அது வென்றது. இது தவிர மாநிலங்கள் அவையில் ஒரு இடம் தரப்பட்டது.

இந்த நிலையில் அதிமுகவிடம் இந்தக் கட்சி 18 இடங்களைக் கோரி வந்தது. பேச்சுவார்த்தைகளின் முடிவில் கடந்த முறை போட்டியிட்டதைவிட ஓரிடம் குறைவாக அது பெறுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக அணியில் இணைந்து 35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுகவிற்கு எத்தனை இடங்கள் என்று இன்னமும் முடிவாகவில்லை. அது குறித்து இன்னமும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

இன்னும் மதிமுகவுடன் மட்டும்தான் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது. அக்கட்சிக்கும் இன்றே தொகுதிப் பங்கீடு முடிவடையுமா என்பது தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் இதுவரையான தொகுதிப்பங்கீடு: தேமுதிக – 41, சிபிஎம் – 12, சிபிஐ – 10, மனித நேய மக்கள் கட்சி – 3, புதிய தமிழகம் , அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி – தலா 2, இந்திய குடியரசுக் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை – தலா 1.

(bb)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: