site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

வரலாறு: முதல்வரானார் எம்.ஜி.ஆர்.!

Posted by sambala87(சூரியன்) on March 13, 2011

கடந்த 1971ம் ஆண்டு நடந்த தேர்தலில், பெருவாரியான இடங்களைப் பிடித்து தமிழக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது தி.மு.க., இந்த அமைச்சரவையில் பங்கேற்பதற்கு அழைக்கப்படுவோம் என எம்.ஜி.ஆர்., நம்பினார். ஆனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்தினால் தான் அமைச்சர் பதவி தரப்படும் என, கருணாநிதி நிபந்தனை விதித்தார். இதற்கு எம்.ஜி.ஆர்., சம்மதிக்கவில்லை. இதனால் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆருக்கும் நீண்ட காலமாக இருந்து வந்த நட்பில் விரிசல் ஏற்பட்டது.

எம்.ஜி.ஆரை பயன்படுத்தி தி.மு.க.,வை பிளவுபடுத்த, மத்தியில் உள்ள சில தலைவர்கள் திட்டமிடுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. 1972ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி திருக்கழுக்குன்றத்திலும், அடுத்து, சென்னை லாயிட்ஸ் காலனியில் நடந்த கூட்டங்களில் எம்.ஜி.ஆர்., பேசியபோது, தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து அனைவருக்கும் தெரிந்தது. கட்சியின் கணக்கு கேட்டார் எம்.ஜி.ஆர்; இதையடுத்து, எம்.ஜி.ஆர்., மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், அக்டோபர் 18ம் தேதி அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கினார்.

அடுத்த ஆண்டான 1973ம் ஆண்டு மே 21ம் தேதி, திண்டுக்கல் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில், எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., முதல் முறையாக போட்டியிட்டது. இந்தத் தேர்தலில் தி.மு.க., – அ.தி.மு.க., ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என நான்கு முனை போட்டி ஏற்பட்டது. இருந்தபோதிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட மாயத்தேவர் 2 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டு வாங்கி மகத்தான வெற்றி பெற்றார். ஸ்தாபன காங்கிரசுக்கு ஒரு லட்சத்து 19 ஆயிரம் ஓட்டுக்களும், தி.மு.க.,விற்கு 93 ஆயிரம் ஓட்டுக்களும், இந்திரா காங்கிரசுக்கு 11 ஆயிரத்து 423 ஓட்டுக்களும் கிடைத்தன.

இதேபோல், கோவை எம்.பி., இடைத்தேர்தலிலும், கோவை மேற்கு சட்டசபை இடைத்தேர்தலிலும் போட்டியிட்ட அ.தி.மு.க., வெற்றி பெற்று தனது வளர்ச்சியை மற்றவர்களுக்கு பறைசாற்றியது.

தொடர்ந்து, 1977ம் ஆண்டு ஜூன் 12 மற்றும் 14 தேதிகளில் தமிழக சட்டசபைத் பொதுத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுடன் இணைந்து அ.தி.மு.க.,வும், இந்திரா காங்கிரசுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிட்டன. ஜனதாவும், தி.மு.க.,வும் தனித்து போட்டியிட்டன. அ.தி.மு.க., 129 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.,வுக்கு 48 இடங்களும், இந்திரா காங்கிரசுக்கு 27 இடங்களும், ஜனதா கட்சிக்கு 10 இடங்களும் கிடைத்தன.

தொடர்ந்து மூன்றாவது முறையாக தமிழகத்தை ஆளும் வாய்ப்பை தி.மு.க., இழந்தது. மகத்தான வெற்றி பெற்ற அ.தி.மு.க., ஆட்சியைப் பிடித்தது. எம்.ஜி.ஆர்., தனது 60வது வயதில் தமிழகத்தின் முதல்வரானார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: