தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது: தி.மு.க., 121, காங்., 63 தொகுதிகள்!

காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. இதன்படி, தி.மு.க., 121 தொகுதிகளிலும், காங்., 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதர கூட்டணி கட்சிகளான, பா.ம.க., 30, விடுதலைச்சிறுத்தைகள் 10, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7, முஸ்லிம் லீக் 2, மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இக்கூட்டணியில் சிறிய கட்சிகளான மூவேந்தர் முன்னேற்றக்கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பா.ம.க., 31 தொகுதிகளும், விடுதலைச்சிறுத்தைகள் 10 தொகுதிகளும், கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7 தொகுதிகளும் பெற்றன. தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தையின் போது பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து இருதரப்பிலும் ஐவர் குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தங்களுக்கு 63 தொகுதிகள் தரவேண்டும், அதுவும் தாங்கள் குறிப்பிடும் தொகுதிகளாக வேண்டும் என்ற காங்கிரசின் அடுக்கடுக்கான நிபந்தனைகளால் வெறுத்துப்போன தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது. மேலும், டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது மத்திய அமைச்சர்கள் ராஜினாமா கடிதம் அளிப்பார்கள் என்றும் அக்கட்சி அறிவித்தது.

“காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 63 சீட் கேட்பது நியாயமா?’ என ஆவேசமாக கேள்வி எழுப்பி, மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க., விலகுகிறது என்று அறிவித்த முதல்வர் கருணாநிதி, இரண்டே நாளில் தன் முடிவை மாற்றிக் கொண்டார். காங்கிரஸ் கேட்ட 63 சீட்களை தர ஒப்புக்கொண்டார். அமைச்சர்களின் ராஜினாமா நாடகமும் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இன்று மாலை காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் மற்றும் மத்திய அமைச்சர் அழகிரி ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது, தி.மு.க., காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் பேச்சுவார்த்தையையடுத்து, இரு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அதன்படி, காங்கிரஸ் தமிழகத்தில் 63 தொகுதிகளில் போட்டியிடும் என்று குலாம்நபி ஆசாத் தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படும் என்றும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வெற்றிக்கூட்டணி என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அழகிரி, பேச்சுவார்த்தை இழுபறி, தொண்டர்களின் செயல்பாட்டை பாதிக்காது என்றும், இருகட்சியினரும் இணைந்து தேர்தல் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.

தி.மு.க., 121 தொகுதிகளில் போட்டி:

காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., தமிழக சட்டசபை தேர்தலில்121 தொகுதிகளில் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் கேட்ட கேள்வி:

கடந்த 5ம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: காங்கிரசுக்கு 60 இடங்கள் கொடுக்க தி.மு.க., ஒப்புக் கொண்ட நேரத்திலே, பா.ம.க.,விற்கு 31 இடங்கள், வி.சி.,க்கு 10 இடங்கள், கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ஏழு இடங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் என, தி.மு.க.,விற்கு 122 இடங்கள் தான் எஞ்சியிருந்தன. இந்நிலையில், காங்கிரஸ் 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் கேட்பதும், அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.

இதுவரை ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:

தற்போதைய நிலையில், ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு 52 தொகுதிகளை தி.மு.க., ஒதுக்கிவிட்டது. மீதமுள்ள 182 தொகுதிகளில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கினாலும், தி.மு.க., வசம் மீதமிருப்பது 122 தொகுதிகள் தான். எனவே, 63 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்தால், தனிப்பெரும்பான்மை பெற 118 எம்.எல்.ஏ.,க்கள் தேவை என்ற நிலையில், தி.மு.க.,வால் 119 தொகுதிகளில் தான் போட்டியிட வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரு சிலவற்றை திரும்பப் பெற்று, காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக் கொள்ள தி.மு.க., முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

தி.மு.க., ……………………………………………121
காங்கிரஸ்………………………………………….63
பா.ம.க., ……………………………………………. 30
விடுதலை சிறுத்தைகள் …………………………… 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் …………….. 7
முஸ்லிம் லீக் ……………………………………….. 2
மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ………………… 1

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s