site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பா.ம.க.,வுக்கு வட மாவட்டங்கள் கை கொடுக்குமா?

Posted by sambala87(சூரியன்) on March 6, 2011

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.,வுக்கு, வட மாவட்டங்கள், கடந்த தேர்தல்களை போல் கை கொடுக்குமா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளை பெற பா.ம.க., முயன்ற போதும், சிட்டிங் எம்.எல்.ஏ.,க் கள் மீது உள்ள அதிருப்தி, சீரமைக்கப்பட்ட தொகுதி எல்லை, கலைக்கப்பட்ட தொகுதி, தி.மு.க.,வினர் அதிருப்தி உள்ளிட்ட காரணங்கள் பா.ம.க., வெற்றி வாய்ப்பை பாதிக்கும் நிலையுள்ளது.

அதற்கு ஏற்றார் போல், நேற்று முன்தினம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், “மேலும் ஒரு சீட் கொடுத்திருந்தால், மிகவும் மகிழ்ந்திருப்பேன்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தன் அதிருப்தியைச் சாமர்த்தியமாக வெளியிட்டார்.

தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., கடந்த சட்டசபை தேர்தலிலும், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்று, 31 தொகுதிகளை பெற்றது. இதில், 18 தொகுதிகளில் பா.ம.க,, வெற்றி பெற்றது. இந்த முறையும் அதே 31 தொகுதிகள் பெற்றுள்ள பா.ம.க., கடந்த தேர்தலில் பெற்ற அதே தொகுதிகளை பெற முயற்சி செய்து வருகிறது.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த முறை தர்மபுரி மற்றும் பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு, தர்மபுரி தொகுதியில் பா.ம.க., வெற்றி பெற்றது. இந்த முறை தர்மபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகளை பெற முயன்ற போதும், தர்மபுரி தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ., வேலுசாமி, பெரிய அளவில் திட்டங்கள் செய்யாததால் எதிர்ப்பு அதிகம் உள்ளது. அதே போல் பென்னாகரம் தொகுதியை தி.மு.க., விட்டு கொடுக்காது. புதிதாக உருவாக்கப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மட்டுமே பா.ம.க.,வுக்கு ஆறுதலாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த முறை காவேரிப்பட்டணம் தொகுதியில் போட்டியிட்டு பா.ம.க., வெற்றி பெற்றது. இம்முறை தொகுதி கலைக்கப்பட்டதால், பர்கூர் தொகுதியை குறி வைத்துள்ளது. இருந்த போதும் இங்கு அமைப்பு ரீதியாக வலு பெறாமலும், பல கிராமங்களில் கிளைகள் கூட இல்லாமலும் இருப்பது பா.ம.க., வெற்றியை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த முறை பெரணமல்லூர், கலசபாக்கம் ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டு, பெரணமல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இம்முறை பெரணமல்லூர் தொகுதி கலைக்கப்பட்டு விட்டதால், செய்யாறு, கீழ்பென்னாத்தூர் ஆகிய தொகுதிகளுக்கு பா.ம.க.,வுக்கு குறி வைத்துள்ளது. இதில், செய்யாறு தொகுதியில் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், அவர் எளிதாக வெற்றி பெறுவது கடினம் என்கின்றனர் பா.ம.க.,வினர்.கீழ்பென்னாத்தூர் தொகுதியில், முன்னாள் ரயில்வே மத்திய இணை அமைச்சர் வேலு போட்டியிட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இது உள்ளூர் பா.ம.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், இங்கும் வெற்றி பெறுவது பெரும் சிரமம்.

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆற்காடு, அணைக்கட்டு ஆகிய மூன்று தொகுதியில் கடந்த தேர்தலில் பா.ம.க., போட்டியிட்டு, அணைக்கட்டு தவிர இரு தொகுதியிலும் தோல்வியை தழுவியது. சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மீது கடும் அதிருப்தி நிலவுவதால், பா.ம.க., வெற்றி பாதிக்கும்.இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட ஜோலார்பேட்டை, அணைக்கட்டு, ஆற்காடு ஆகிய மூன்று தொகுதியை பெற முயற்சி செய்து வருகிறது. புதிய தொகுதியை தவிர இரு தொகுதியிலும் பா.ம.க.,வின் வெற்றி கேள்விக் குறியாக உள்ளது.

சேலம் மாவட்டத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, தாரமங்கலம் ஆகிய நான்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறியதோடு, ஆளுங்கட்சிக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தனர். மேலும், தொகுதிகளில் குறிப்பிட்டு சொல்லும்படியான வளர்ச்சி பணிகள் இல்லை.தற்போது, தாரமங்கலம் தொகுதி கலைக்கப்பட்ட நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கள் மீதுள்ள அதிருப்தி மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட்டால் வெற்றியை பாதிக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களால், தி.மு.க.,வினர் ஓட்டுகள், பா.ம.க.,வுக்கு கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கபிலர் மலை தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றனர். இம்முறை முயற்சி செய்து வருகின்றனர். தொகுதியில்சிட்டிங் எம்.எல்.ஏ.,க்கு எதிர்ப்புகள் இல்லை என்ற போதும், தொடர்ந்து இத்தொகுதியை பா.ம.க., வுக்கு ஒதுக்குவது, தி.மு.க.,வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்.தி.மு.க., கூட்டணியில், கடந்த தேர்தல் போல் இம்முறையும் எளிதாக வெற்றி பெறலாம் என, பா.ம.க., தலைமை நினைத்திருந்த போதும், பா.ம.க., போட்டியிடும் தொகுதியில், தி.மு.க.,வினரின் ஓட்டுகள் முழு அளவில், பா.ம.க.,வுக்கு கிடைப்பதில் சிக்கல் இருப்பதால், பா.ம.க.,வின் கனவு பலிக்குமா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

இதையெல்லாம் கணக்கு பார்த்து, “இன்னும் ஒரு தொகுதி கொடுத்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்பேன்’ என, ராமதாஸ்,தன் அதிருப்தியை சாமர்த்தியமாக வெளியிட்டுள்ளார். இனி தொகுதி ஒதுக்கீட்டிற்குப் பின் பல்வேறு கருத்துக்கள் வெளி வரலாம்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: