எந்திரன் -2 ரஜினி ஓகே சொன்னாரா?

எந்திரன் 2 படத்தை தயாரிக்கும் பணியில் சன் பிக்சர்ஸ் மும்முரமாக உள்ளதாகவும், இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினி யும் சம்மதித்துவிட்டார் என்றும் சன் பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அதிக பொருட்செலவில் உருவாகி, 80 ஆண்டு சினிமா வரலாற்றில் இல்லாத அளவு பெரும் வசூலைக் குவித்தபடம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன். அதிகாலை 4.00 மணிக்கெல்லாம் முதல் காட்சி போடப்பட்ட ஒரே திரைப்படம் அநேகமாக எந்திரனாகத்தான் இருக்கும்.

இந்தியாவின் வடகோடியிலும் இந்தப் படம் மிகப் பெரிய வசூலுடன் ஓடி மூக்கில் விரல் வைக்க வைத்தது. பொழுதுபோக்கின் உச்சமாகக் கருதப்படும் இந்தப் படம், தரத்தில் வேறு எந்தப் படமும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.

எந்திரன் படம் வெளியானதிலிருந்தே, இதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஷங்கரும் அதற்கேற்பவே இப்படத்தை முடித்திருந்தார். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும் ரோபோ ரஜினிக்கு மீண்டும் உயிர்ப்பெற்று பேசுவது போல க்ளைமாக்ஸ் அமைந்திருந்தது.

ஆனால் பொதுவாகவே, ஒரு படம் முடிந்ததும் அத்தோடு அந்த நினைப்பையே துடைத்துவிட்டு, அடுத்த படத்துக்குப் போகும் இயல்புடையவர் ரஜினி. எனவே அவர் இந்த இரண்டாம் பாகத்துக்கு சம்மதித்துள்ளாரா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் இப்போது எந்திரன் -2-ம் பாகம் தயாராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதற்கு ரஜினியும் சம்மதித்துவிட்டதாக சன்பிக்சர்ஸ் சிஇஓ ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், எந்திரனுக்கு பிறகு சன் பிக்சர்ஸின் நேரடித் தயாரிப்பு என்றால் அது எந்திரன் 2-ம் பாகமாகத்தான் இருக்கும். அதைப் பற்றி ரஜினி சாரிடம் பேசிவிட்டோம். ஷங்கரும் கதையுடன் தயாராக இருக்கிறார். கண்டிப்பாக எந்திரன் படத்தின் பட்ஜெட்டை இந்த இரண்டாம்பாகம் தாண்டிவிடும்.

அந்த அளவுக்கு பிரமாண்டமாகவும், இந்தியாவில் யாருமே எதிர்ப்பார்க்காத அளவுக்கு புதுமையாகவும் சர்வதேச அளவிலான படமாக இந்த எந்திரன் பாகம் 2 அமையும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும், என்றார்.

ரஜினி இப்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கிறார். அந்தப் படம் இந்த ஆண்டு இறுதியில் அல்லது வரும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அதன் பிறகு எந்திரன் 2 பணிகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.

ஆனால் எந்திரன் 2 குறித்து ரஜினி இதுவரை எங்குமே வாய் திறக்கவில்லை. எனவே அவர் சொன்னால்தான் அது இறுதியான முடிவாக இருக்கும்!

எல்லாம் சரி, மற்ற நடிகர்களை வைத்தும் நேரடிப் படம் எடுக்கும் ‘ஐடியா’ சன் டிவியிடம் இல்லையா?

(tt)

Advertisements

One thought on “எந்திரன் -2 ரஜினி ஓகே சொன்னாரா?”

  1. இது ரொம்ப முக்கியம். அவனவன் கோடிக்கணகில் சம்பாதிக்க அவன் வேலையை பார்க்கிறான்.நாம் ஏன் அவன்களை தலையில் வைத்துக் கொண்டாட வேண்டும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s