site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இந்தியாவி்ல் ஊழலுக்கு எதிராக அமெரிக்காவில் தண்டியாத்திரை!

Posted by sambala87(சூரியன்) on March 3, 2011

இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி அமெரிக்காவில் இரண்டாம் கட்ட தண்டியாத்திரை வரும் 12-ம் தேதி நடக்கிறது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மகாத்மா காந்தியால் கடந்த 1930-ம் ஆண்டு ஆங்கிலேயரின் உப்புச்சட்டத்தை எதிர்த்து மார்ச் 12-ம் தேதி குஜராத்தின் சபர்மிதி ஆசிரமத்திலிருந்து தண்டியாத்திரையை மேற்கொண்டார்.

அதே போனறு அமெரிக்காவில் உள்ள சில அமெரிக்கர்கள் அல்லாத இந்தியர்கள் அமெரிக்காவி்ல் தண்டியாத்திரை-2 மேற்கொள்கின்றனர். தற்போது இந்தியாவை உலுக்கியுள்ள 2-ஜிஸ்பெக்டரம் , வெளியாநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் குவித்துள்ள கறுப்பு பணம், உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்களால் இந்தியாவின் கவுரவத்திற்கு உலக நாடுகளில் தலைகுனிவு ஏற்படும் சூழ்நிலையை போக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இதை அறிந்த அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் அல்லாதவர்கள் (என்.ஆர்.ஐ ) இந்தியாவில் ஊழலை ஒழித்து கட்ட வலியுறத்தி தண்டியாத்திரை , வரும் மார்ச் 12-ம் தேதி ‌துவங்கி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மார்டின்லூதர் சிங் சிலையிலிருந்து புறப்பட்டு சான்பிரான்ஸிஸ்கோ வழியாக, லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள காந்தி சிலையில் வரும் 26-ம் தேதி முடிக்க உள்ளதாகவும் ஏறத்தாழ 240 மைல் இந்த தாண்டியாத்திரை தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது.அப்போது ஊழலை எதிர்த்து பிரசாரம் செய்யவும், ஊலகளாவில் இந்தியாவின் பெருமையினை விளக்கம் உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: