மே 13 ஒட்டு எண்ணிக்கை: ஒரு திட்டமிட்ட சதி?

வாக்குச்சீட்டுகளை பயன்படுத்தினால் முடிவுகளை உடனே அறிவிக்க முடியவில்லை என்று சொல்லித்தானே மின்னணு வாக்கு எந்திரத்தை கொண்டுவந்தது இந்த தேர்தல் ஆணையம்? ஒரு மாதம் கழித்துதான் முடிவு என்றால் பின் எதற்கு அந்த எந்திரம்?

ஒரு மாதம் கழித்து ஒட்டு எண்ணிக்கை (மே 13) என்பது மக்களை முட்டாளாக்கும் செயல். கண்டிப்பாக இதை எந்த கட்சிகளும் ஒத்து கொள்ளவே கூடாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து தேர்தல் கமிசன் மேல் வழக்கு போட வேண்டும். மக்களும் இதை எதிர்த்து தேர்தல் கமிசனுக்கு தந்தி அனுப்ப வேண்டும்.

இது மட்டும் நடந்தால் மக்களாகிய நாம் ஓட்டு போட்டும் ஒன்னும் பிரயோஜனம் இல்லை. பொது நல வழக்குகள் குவிய வேண்டும். இது ஒரு திட்டமிட்ட சதி. மக்களையும், எதிர் கட்சிகளையும் முட்டாளாக்கும் செயல். இதை ஒரு போதும் அனுமதிக்கவே கூடாது. தேர்தல் நடக்காவிட்டாலும் பரவாயில்லை, அல்லது தள்ளி போனாலும் பரவாயில்லை. தேர்தல் நடந்து இரண்டே தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும்.

பொதுநல வாதிகளே, பத்திரிக்கைகளே, மக்களே எல்லோரும் தேர்தல் கமிசன் மீது வழக்கு போட்டு இதை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும்.

கடந்த தேர்தலிலேயே, தமிழகம் பல தில்லுமுல்லுகளை கண்டுவிட்டது.

வை.கோ. தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தி அவர் தோற்றுப்போனார் என்று சொன்ன தேர்தல் ஆணையம், மத்திய அமைச்சர் சிதம்பரம் நின்ற தொகுதியில் மட்டும், எதிர் வேட்பாளர் விண்ணப்பம் கொடுத்தும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த மறுத்தது ஏன்?

மாலை 5 மணி வரை அ.தி.மு.க. வேட்பாளர் முன்னணியில் இருந்தும், கடைசி ஒரு மணிநேரத்தில் சிதம்பரம் சில நூறு வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது எப்படி?

திருச்சி தொகுதியில் 4 மணிக்கே ஓட்டு எண்ணிக்கை முடிவுற்றும் 8 மணி வரை முடிவு அறிவிக்கப்படாதது ஏன்?

அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் குத்தித்த பிறகே பல மணி நேர இழுத்தடிப்புகளுக்கு பிறகு வேண்டா வெறுப்பாக அ.தி.மு.க.வேட்பாளர் வெற்றிபெற்றார் என்று அறிவிக்க என்ன காரணம்?

இந்த இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது? சில மணி நேரங்களிலேயே இத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றி, மத்திய அமைச்சர்களாகவும் வளம் வரும் பலர், இந்த முறை ஒரு மாத இடைவெளியில் எத்தனை தில்லுமுல்லுகளை செய்ய மாட்டார்கள்? திருடர்களுக்கு திருட போதிய கால அவகாசம் தர காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் மே 10 தேர்தல் என்பதற்காக, தமிழ் நாட்டில் எதற்கு மே 13 ஒட்டு எண்ணிக்கை? ஒரு மாத இடைவெளியில் ஓட்டு பெட்டிகளை அடைகாப்பது யார்? அதற்காக ஆகும் செலவுகள்?

ஓட்டு போடுவதற்கு ஏன் வாரத்தின் மத்திய நாள் புதன் கிழமையை தேர்ந்தெடுத்தனர் என்பதும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் , காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் , விலைவாசி உயர்வு போன்றவற்றை அதிகம் தெரிந்து வைத்திருப்பது படித்த மக்கள் மட்டுமே.

இந்த மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக தான் இருக்ககூடும். ஏன் என்றால் புதன் கிழமை ஒரு நாளுக்காக அலைந்து திரிய முடியாது. கிராமத்து மக்கள் இலவசத்தின் காரணமாக அதிகம் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்பதும், அவர்களுக்கு என்ன கிழமை என்பது முக்கியம் இல்லை என்பதாலும் இவ்வாறு அறிவித்திருக்காலம்.

ஏப்ரல் 13 இல் தேர்தல் என்றால் மே 13 இல் ஒட்டு எண்ணிக்கை. அதாவது மேற்கு வங்கத்தில் 10 ஆம் தேதிவரை தேர்தல் உள்ளதால், இடைப்பட்ட காலத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் தோற்றால் மேற்கு வங்கத்தில் தோற்றுவிடுமோ என்ற அச்சம் உள்ளதால் தான் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அதேபோல் தேர்தல் நடக்கும் தேதி , தேர்தலின் வாக்குகளின் முடிவு தெரியும் தேதி இரண்டுமே திமுகவுக்கு சாதகமாக உள்ள 13.இது கருணாநிதிக்கு சாதகமான எண் . இதன் மூலம் இது காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வின் திட்டமிட்ட சதி என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஞாயிறு (சூரியன் )குமுறல்கள் ….

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s