site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இந்தியாவிடமிருந்து தேர்தல் பயிற்சி பெற விரும்பும் உலக நாடுகள்!

Posted by sambala87(சூரியன்) on February 28, 2011

இந்தியாவிடமிருந்து தேர்தல் நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றுவருவது உலக நாடுகளுக்கு ஆச்சரியமளிக்கும் விஷயமாகும். இதனால், பெரும்பாலான நாடுகள், அதிலும் குறிப்பாக வளரும் நாடுகள், இந்தியாவிடமிருந்து தேர்தலை நடத்துவது தொடர்பான பயிற்சியைப் பெற ஆர்வமாக இருக்கின்றன. ஏற்கெனவே பல நாடுகளுக்குச் சென்று இந்திய அதிகாரிகள் தேர்தல் தொடர்பாக பயிற்சியளித்திருக்கின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக இந்தியாவிடம் பயிற்சி பெறுவதற்கு உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக மீரா சங்கர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் தேர்தலுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படுவதைக் குறிப்பிட்ட அவர்,”நமது அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி அளிப்பதுதான் இந்த மையத்தின் முதல் நோக்கமாக இருந்தாலும்,இங்கு பயிற்சி பெறுவதற்கு உலகின் பல நாடுகள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன’ என்றார்.

நமது அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கும் தேவை நிறைவடைந்தால், பிற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் பயிற்சியளிக்க முடியும்.

நமது தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி, அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகளுடன் அண்மையில் தேர்தல் தொடர்பான பேச்சுகளை நடத்தினார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அண்மையில் பேச்சு நடத்திபோது, எகிப்து தேர்தலில் இந்தியா உதவுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

பிரமாண்டமான தேர்தலை நடத்தும் அனுபவம் நமக்கு உண்டு என்பதால், எகிப்து அரசிடம் ஆலோசனை நடத்தி, இதுபற்றி முடிவெடுக்கலாம் என அமெரிக்காவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றார் மீரா சங்கர்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: