அ.தி.மு.க. வியுகம் :பா.ம.க.வுக்கு போட்டியாக தே.மு.தி.க. வேட்பாளர்கள்!

கடந்த தேர்தலை போல, வரும் சட்டசபை தேர்தலிலும், தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணையும் பட்சத்தில், பா.ம.க.,வை தோற்கடிக்கவும், கடும் போட்டியை ஏற்படுத்தவும், பா.ம.க., போட்டியிட உள்ள வட மாவட்ட தொகுதிகளில், தே.மு.தி.க., போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் இ.கம்யூ.,- மா.கம்யூ.,- பா.ம.க., கட்சிகளும், அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க.,- வி.சி.,யும் இடம் பெற்றன. தே.மு.தி.க., 233 தொகுதியிலும் தனித்து போட்டியிட்டது. இதில், 31 தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., 18 தொகுதியில் வென்றது. தே.மு.தி.க., ஒரு தொகுதியில் வென்றது. தேர்தலுக்கு பின் வி.சி., தி.மு.க.,விலும், அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க., – அ.தி.மு.க., கூட்டணியிலும் இணைந்து போட்டியிட்ட ஏழு பார்லி., தொகுதியிலும் பா.ம.க., தோல்வியை தழுவியது. 2010 மார்ச் மாதம் நடந்த பென்னாகரம் இடைதேர்தலிலும் தனித்து போட்டியிட்ட, பா.ம.க., தோல்வியை சந்தித்தது.

எனவே, கூட்டணி சேர்ந்தால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையில், அதன் பின் ஆளுங்கட்சியான தி.மு.க.,வுக்கு ஆதரவாக பா.ம.க., செயல்பட துவங்கியது. எனவே, சட்டசைப தேர்தலில் போட்டியிட தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ம.க.,வுக்கு, 31 சட்டசபை தொகுதியும், ஒரு ராஜ்யசபா தொகுதியையும் தி.மு.க., ஒதுக்கியுள்ளது. பா.ம.க., போட்டியிடம் தொகுதிகளில் பெரும்பாலானவை வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் தான். மேற்கு மாவட்டத்தில் சில தொகுதிகள் மட்டும் பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்படும். தென் மாவட்டங்களில் ஒரு இடம் கூட பெற பா.ம.க., விரும்பாது.

தி.மு.க.,- பா.ம.க., கூட்டணி உறுதியான நிலையில், மற்றொருபுறம் அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பா.ம.க., போட்டியிடும் தொகுதிகளில், பெரும்பாலானவற்றையோ அல்லது போட்டி கடுமையாக இருக்கம் என கருதப்படும் தொகுதிகளையோ, தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலில் பா.ம.க., திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஆற்காடு, திருப்பத்தூர், பெரணமல்லூர், மேல்மலையனூர், முகையூர், பண்ருட்டி, காவேரிபட்டணம், தர்மபுரி, மேட்டூர், தாரமங்கலம், ஓமலூர், கபிலர்மலை, இடைப்பாடி, பவானி, பூம்புகார் ஆகிய தொகுதியில் வெற்றி பெற்றது.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்து போட்டியிட்டிருந்தால், திருப்போரூர், காஞ்சிபுரம், பெரணமல்லூர், மேல்மலையனூர், முகையூர், பண்ருட்டி, காவேரிபட்டணம், தாரமங்கலம், ஓமலூர், கபிலர்மலை, இடைப்பாடி, பவானி, பூம்புகார் ஆகிய, 13 தொகுதியில் பா.ம.க., தோல்வியை தழுவியிருக்கும். இதர, ஐந்து தொகுதிகளிலும் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் பா.ம.க., வெற்றி பெற்றுள்ளதால், அந்த தொகுதிகளையும் அ.தி.மு.க., – தே.மு.தி.க., கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது எனவும் அ.தி.மு.க.,வினர் கூறி வருகின்றனர். மேலும், பா.ம.க., போட்டியிட்ட தொகுதிகளில், வன்னியர் இனத்தை சேர்ந்த இளைஞர்கள் பெரும்பாலானோர் தற்போது தே.மு.தி.க.,வில் உள்ளனர். எனவே, வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில், தே.மு.தி.க., இணைந்தால், பா.ம.க., போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில், கடும் போட்டியை பா.ம.க., சந்திக்கும்.

தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கும் ரகசியம்:
கடந்த சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க, தலைவர் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். இதில், விஜயகாந்த் 61 ஆயிரத்து 337 ஓட்டு பெற்று வெற்றி பெற்றார். பா.ம.க, வேட்பாளர் கோவிந்தசாமி 47 ஆயிரத்து 560 ஓட்டு பெற்று, இரண்டாம் இடத்தையும், அ.தி.மு.க., வேட்பாளர் காசிநாதன் 35 ஆயிரத்து 876 ஓட்டு பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பா.ம.க., கோட்டை என கூறப்பட்ட விருத்தாச்சலத்தில், பா.ம.க.,வேட்பாளரை விட, 13 ஆயிரத்து 777 ஓட்டு அதிகம் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதுவே, பா.ம.க.,வுக்கு செல்வாக்கு அதிகமுள்ள தொகுதிகளை தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்க அ.தி.மு.க., திட்டமிடுவதற்கு முக்கிய காரணம்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s