site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரெய்னாவை முந்துகிறார் விராத் கோஹ்லி : தோனி

Posted by sambala87(சூரியன்) on February 19, 2011

“” பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில், ரெய்னாவை முந்துகிறார் விராத் கோஹ்லி” என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தாகாவில் துவங்குகிறது.

இதற்கான பயிற்சி போட்டிகளில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தை வீழ்த்தியது. தனது முதல் போட்டியில் நாளை வங்கதேசத்தை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்திய அணி குறித்து தோனி கூறியது:

தேர்வு சிக்கல்:

தற்போது, அணியில் விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்வதற்கான நேரம் வந்துள்ளது. சேவக், சச்சின் துவக்க வீரராக களமிறங்கும் நிலையில் மூன்றாவதாக காம்பிர் வருகிறார். அடுத்து வரும் 4வது இடம் மிக முக்கியமானது. இதற்குத் தான் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் காம்பிருடன் இணைந்து விராத் கோஹ்லி விளையாடலாம்.

கோஹ்லி முன்னிலை:

ஏனெனில் இவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதலில் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் கோஹ்லி, பின் பவுலர்களை பதம் பார்க்கத்துவங்குகிறார். இவரது தற்போதைய பார்மை பார்க்கும் போது, இவர், ரெய்னாவை விட சற்று முன்னணியில் உள்ளார்.அடுத்து 5 அல்லது 6வது இடத்தில் வரும் ரெய்னாவும் தன்பங்கை சிறப்பாக செய்கிறார். இதனிடையே, அடுத்து வரும் போட்டிகளில் யுவராஜ் சிங் ஒன்றிரண்டு அரைசதம் அடித்து விட்டால், அணியை தேர்வு செய்வதில் கூடுதல் சிக்கல் ஏற்படும்.

யுவராஜ் சாதகம்:

அதேநேரம் எப்படியும் நான்கு பவுலர்களுடன் களமிறங்க வேண்டிய நெருக்கடியும் உள்ளது. தவிர, “பார்ட் டைம்’ பவுலர்களும் அணிக்கு முக்கியத் தேவை. இதில் இடது கை சுழற் பந்து வீச்சாளராக யுவராஜ் அணியில் இடம் பெற்றிருப்பது, மற்றவர்களை விட நமக்கு பெரிய நன்மை.
பவுலிங்கில், மிடில் ஓவர்களில் அணிக்கு தேவையான விக்கெட்டை கைப்பற்றி கொடுக்கிறார். இந்த விஷயத்தில் இவர் மற்றவர்களை விட, சற்று மேலோங்கி நிற்கிறார். அணியில் அனைத்துபேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடும் போது, ஒருவரைப் பற்றி கவலையில்லை. தவிர, பேட்டிங்கில் இவர் அடித்து நொறுக்க ஆரம்பித்து விட்டார் என்றால், அப்புறம் இவரை கட்டுப்படுத்துவது கடினம்.

அஷ்வின் சந்தேகம்:

தமிழகத்தின் அஷ்வின் பல்வேறு வகைகளில், வித்தியாசமாக பவுலிங் செய்கிறார். அடுத்து பேட்டிங்கில் தன்பங்கிற்கு முடிந்தளவுக்கு ரன்கள் எடுத்து கைகொடுக்கிறார். இது நமக்கு மிகவும் சாதகமானது. இவரை அணியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பதை ஆடுகளத்தை பார்வையிட்டு முடிவு செய்வோம். இதற்கேற்ப 2 வேகம், 2 சுழற்பந்து வீச்சாளர்கள் அல்லது 2 வேகம், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவோம்.
இவ்வாறு தோனி தெரிவித்தார்.

ஸ்ரீசாந்துக்கு மீண்டும் “அட்வைஸ்’

களத்தில் எதிரணி வீரர்கள் மீது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் “வல்லவர்’ ஸ்ரீசாந்த். இவரை கட்டுப்படுத்துவது கடினம் என்று கேப்டன் தோனியே கூறினார். இதனால் தான், தென் ஆப்ரிக்க தொடரில் ஸ்ரீசாந்த் சிறப்பாக செயல்பட்டும், உலக கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்காமல் போனது என்றும் செய்திகள் வெளியானது. ஒருவழியாக பிரவீண் காயம் காரணமாக, அணியில் மீண்டும் இடம் பெற்ற ஸ்ரீசாந்த், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பாண்டிங்குடன் மறுபடியும் “உரசினார்’.
இதுகுறித்து கேப்டன் தோனி கூறுகையில்,”” களத்தில் அளவு கடந்த ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவதில் ஸ்ரீசாந்த் எல்லை மீறக்கூடாது.

இது எனது தனிப்பட்ட “அட்வைஸ்’. ஒருவேளை யாரையாவது எரிச்சல் படுத்த வேண்டும் என்று விரும்பினால், அதை எதிரணி வீரர்கள் மீது தான் காட்ட வேண்டும். சகவீரர்களை விட்டுவிட வேண்டும். தவிர, தனிப்பட்ட முறையிலான விவாதத்தில் ஈடுபடக்கூடாது. இதை பின்பற்றி நடந்தால் மகிழ்ச்சியடைவேன்,” என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: