திமுக கூட்டணியில் பாமக: 31 தொகுதிகள்!

வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு இடம் தரப்பட்டுள்ளது. அந்தக் கட்சிக்கு 31 இடங்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. மேலும் 2012ம் ஆண்டில் பாமகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டும் தரப்படும் என்று திமுக உறுதியளித்துள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இதே 31 இடங்களும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் பாமகவுக்கு திமுக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை ஆகிய முக்கிய கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் பாமகவையும் சேர்க்க முதல்வர் கருணாநிதி விரும்பினார். ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்தக் கூட்டணி அமைவதில் சிக்கல் நீடித்தது.

இதைத் தொடர்ந்து திமுக தரப்பிலிருந்து காங்கிரசிடம் பேசி சமாதானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாமக இளைஞரணித் தலைவர் சோனியா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.

அப்போது கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சோனியாவும் கருணாநிதியும் தொலைபேசியில் பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து இன்று பாமக நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

காலை 9 மணி முதல் 11 மணி வரை இருவரும் சந்தித்துப் பேசினர். அப்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்பி ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தைகளில் பாமக 40 இடங்களைக் கோரியது. இறுதியில் பாமகவுக்கு கடந்த தேர்தலைப் போலவே 31 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்க திமுக முன் வந்தது. இதை பாமக நிறுவனர் ராமதாசும் ஏற்றுக் கொண்டதையடுத்து ஒப்பந்தம் ஏற்பட்டது.

முன்னதாக தனது பேரன் சுகந்தன் திருமண விழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் ராமதாஸ் வழங்கினார்.

இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களுக்கு ராமதால் அளித்த பேட்டி:

எனது பேரன் திருமண அழைப்பிதழை கொடுக்க மகிழ்ச்சியுடன் வந்தேன். தேர்தல் உடன்பாடும் முடிந்து விட்டது. அந்த மகிழ்ச்சியுடன் திரும்பி வந்திருக்கிறேன். பாமகவுக்கு 31 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடும் கையெழுத்தாகிவிட்டது.

கேள்வி: கடந்த தேர்தலின் போதும் இதே அளவுதான் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த முறை போட்டியிட்ட அதே தொகுதிகளில் போட்டியிடுவீர்களா?

பதில்: இது தொடர்பாக பேச்சுவார்த்தை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முடிவு செய்வார்கள்.

கேள்வி: சோனியா காந்தியை சந்திப்பீர்களா?

பதில்: அன்புமணி ஏற்கனவே டெல்லியில் சோனியாவை சந்தித்துப் பேசி விட்டார்.

கேள்வி: இன்று கூட்டணி முடிவாகும் என்று எதிர்பார்த்து வந்தீர்களா?

பதில்: எதிர்பார்த்தும் வந்தேன்.

கேள்வி: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகலாம் என்று ஒரு பேச்சு எழுந்துள்ளதே?

பதில்: திமுக தலைமையில் காங்கிரஸ், பாமக, விடுதலை விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

கேள்வி: 45 தொகுதிகள் யார் தருகிறார்களோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி என்று முன்பு கூறினீர்களே?

பதில்: தேர்தல் தொடர்பாக ஒப்பந்தம் போடும் முன் ஊடக நண்பர்கள் கேள்வி கேட்கும் போது அதிக எண்ணிக்கைகளைத்தான் சொல்ல வேண்டும். (சிரித்தபடி)

கேள்வி: கடந்த தேர்தலிலும் இதே அளவு தொகுதிகள்தான் கிடைத்தன. இந்த தேர்தலிலும் அதே எண்ணிக்கையில் போட்டியிடுகிறீர்களே..அது ஏன்?

பதில்: நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்.

கேள்வி: பாமகவின் பேரம் செய்யும் வலிமை (bargain power) குறைந்து விட்டதா?

பதில்: குறையவும் இல்லை, கூடவும் இல்லை.

கேள்வி: திமுக மற்றும் அதனோடு கூட்டணி வைத்துக் கொள்ளும் கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்று எதிர்க் கட்சிகள் கூறியுள்ளனவே?

பதில்: வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் தவிர இன்னும் பல கட்சிகள் சேர இருக்கின்றன. இந்த கூட்டணி மிகப் பெரிய வெற்றியை பெறும்.

(tt)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s