373 லட்சம் கோடி டாலருக்கு அமெரிக்க பட்ஜெட்!

அணு ஆயுத பாதுகாப்பு, நவீனமயமாக்குவது உள்ளிட்டவற்றுக்கு 1,180 கோடி டாலரை அமெரிக்க அதிபர் ஒபாமா ஒதுக்கியுள்ளார். பட்ஜெட்டில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாக அமைப்புக்கான முதலீடு 760 கோடி டாலராகும்.

இதற்கான பட்ஜெட் அனுமதிக்கு நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார் ஒபாமா. அமெரிக்க பட்ஜெட் மொத்த மதிப்பு 373 லட்சம் கோடி டாலராகும். இது 2011-2012-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளாகும்.

அமெரிக்காவில் நிதி ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி முதல் செப்டம்பர் வரையில் கணக்கிடப்படுகிறது. பட்ஜெட் பரிந்துரைகள் தாக்கல் செய்யப்பட்டு ஜனவரி கடைசி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல், இரண்டாவது வார திங்கள் கிழமையில் தாக்கல் செய்யப்படும். பின்னர் அதுகுறித்து விவாதிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றப்படும்.

அமெரிக்க விண்வெளி மையம் நாசாவுக்கான ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தானுக்குக் கடன் வழங்கும் அளவு குறைக்கப்படவில்லை.

அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைப்பதற்கும், அவற்றை நவீனமயமாக்குவதற்குமாக ஒதுக்கப்பட்ட தொகை இந்திய மதிப்பில் ரூ. 53,100 கோடி. இதில் பாதுகாப்பாக, பத்திரமாக பராமரிப்பதற்காக மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 34,200 கோடி.

அணு ஆயுதங்களை பாதுகாப்பாக வைப்பது மிகவும் சிக்கலான விஷயமாகும். இதற்கான கட்டமைப்புகள் மிகவும் வலிமையானதாகவும், அதிக பாதுகாப்பு நிறைந்ததாகவும் இருக்க வேண்டியது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 250 கோடி டாலர் தொகையானது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கானது. இதன் மூலம் அணுக் கழிவுகளை பத்திரமாக அகற்ற பயன்படுத்தப்படும்.

அத்துடன் அணு சக்தி பொருள்களை கடத்துவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிவதற்கும் இத்தொகை பயன்படுத்தப்படும்.

கப்பல் படை அணு உலைகளை பராமரிக்க 120 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை மூலம் நீர்மூழ்கியிலிருந்து அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணையை தயாரிக்க இத்தொகை பயன்படுத்தப்படும்.

இவை தவிர 31.80 கோடி டாலர் தொகை ரசாயன, உயிரி, கதிரியக்க போர்க்கருவிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, நிர்வகிக்க ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 66.50 கோடி டாலர் தொகை அடுத்த தலைமுறை மருத்துவ சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டது.

இதன் மூலம் போர் நிகழ்ந்தால் ஏற்படும் உயிரி, கதிரியக்க ஆபத்துகளிலிருந்து பாதுகாக்க இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு-தனியார் பங்கேற்புடன் தடுப்பு மருந்து தயாரிப்புக்கு 20 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாசாவுக்கு நிதி குறைப்பு: அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா-வுக்கு பட்ஜெட்டில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகையைக் காட்டிலும் 1.6 சதவீதம் குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளது. நாசாவுக்கான ஆண்டு பட்ஜெட் 1,870 கோடி டாலராகும். இதே நிலை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் வாகனத்தை உருவாக்கும் பணிக்குத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு 310 கோடி டாலர்: அமெரிக்க பட்ஜெட்டில் பாகிஸ்தானுக்கான நிதி குறைக்கப்படவில்லை. அமெரிக்க தூதரக அதிகாரியை பாகிஸ்தான் விடுவிக்க மறுத்துள்ள சூழலில் இரு நாடுகளிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் அந்நாட்டுக்கான உதவித் தொகையை அமெரிக்கா குறைக்கவில்லை. இந்திய மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை ரூ. 13,950 கோடியாகும்.

பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க 110 கோடி டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சகத்துக்கு 736 கோடி டாலர் ஒதுக்குமாறு தனது பட்ஜெட்டில் பரிந்துரைத்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு அமெரிக்கா அளித்து வரும் உதவிக்காக 150 கோடி டாலர் ஒதுக்கியுள்ளது. இதில் குறிப்பாக எகிப்துக்கான ஒதுக்கீடு அதிகமாகும்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s