”இந்தியாவை பின்பற்றி நடக்க வேண்டும்”

பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐ.எம்.எஃப்.) இந்திய வங்கி அதிகாரிகளையும் ,ரிசர்வ் வங்கியின் இருந்த கவர்னர் ஒய்.வி. ரெட்டியையும் அது மனம்திறந்து பாராட்டியுள்ளது.

2008-ம் ஆண்டுக்கு முந்தைய காலத்தில் நிதி நிறுவனங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் சரிவை நோக்கிச் சென்றபோது என்ன நடந்தது என்று ஆராய்ந்த அமைப்பு தயாரித்த அறிக்கை இதைத் தெரிவிக்கிறது.

“இந்தியாவில் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நன்கு வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியும் அனுபவம் வாய்ந்த அதிகாரிகளின் தீவிர கண்காணிப்புடனும் செயல்பட்டன.

கடன் வாங்கினால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நாணயம் இந்தியர்களிடம் இருப்பதும், கடன் கொடுத்தால் அதை ஒழுங்காகத் திரும்ப வசூலிக்க வேண்டும் என்ற முனைப்பு அதிகாரிகளிடம் இருப்பதும்தான் வங்கிகளின் வெற்றிகரமான செயல்பாட்டுக்குக் காரணம். அத்துடன் இந்தியர்கள் கடன் வாங்கி ஊதாரித்தனமாகச் செலவிடும் பழக்கம் இல்லாதவர்கள். நல்ல நிலையிலும் நெருக்கடியான நிலையிலும் கூட தங்களால் முடிந்த அளவுக்குச் சேமிப்பவர்கள். எனவே வெளிநாடுகளிலிருந்துதான் முதலீடு பெற வேண்டும் என்ற அவசியமே இல்லாமல் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்கு உள்நாட்டிலேயே கணிசமான அளவுக்கு முதலீட்டைத் திரட்ட முடிந்தது.

வங்கிகளிடம் உள்ள நிதியைக் கேட்போருக்குக் குறைந்த வட்டியில் கடனுக்குக் கொடுங்கள், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடுங்கள் என்று உலக வங்கியும் பன்னாட்டுச் செலாவணி நிதியமும் கூறியும்கூட, சந்தையில் உள்ள தேவைகளுக்கு ஏற்பவே கடன்கள் வழங்கப்பட்டன. அத்துடன் கடனுக்கான வட்டியும் குறைக்கப்படவில்லை. எல்லாவற்றையும்விட முக்கியம் எந்தவித பிணையும் இல்லாமல் கடன் கொடுக்கப்படவே இல்லை.

வீட்டுக் கடன், பயிர்க் கடன், வாகனக் கடன் போன்றவையும் தகுந்த ஆய்வுகளுக்குப் பிறகே, கடன் வாங்குகிறவர் திருப்பிச் செலுத்தும் அளவுக்குப் பொருளாதார வசதி படைத்தவர், நாணயமானவர் என்பது உறுதியாகத் தெரிந்த பிறகே கடன் தரப்பட்டது. இதனால் கடன்கள் ஒழுங்காக வசூலாயின. விவசாயிகளால் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டபோது அரசு வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடன்களை அரசே திருப்பிச் செலுத்தியதால் வங்கிகள் பெருத்த நஷ்டத்திலிருந்து தப்பின. இந்த வகையிலேயே இந்திய நிதித்துறை எந்தவித நெருக்கடியிலும் சிக்காமல் மீள முடிந்தது’ என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வங்கிகளும் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் திவாலான பிறகு எடுத்த நடவடிக்கைகள் பலவற்றை இந்தியா, ஏற்கெனவே அந்த நிதி நிறுவனங்கள் நல்ல நிலையில் இருந்த போது எடுத்ததால்தான் அவற்றின் நிலைமை மேலும் வலுவடைந்தது என்றும் அறிக்கை பாராட்டுகிறது.

உலகம் எங்கும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வேலைவாய்ப்பு, உற்பத்தி எல்லாம் சரிவைச் சந்தித்தபோது இந்தியாவில் மட்டும் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி 6.7% ஆக இருந்ததை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதிலிருந்தே இந்தியர்களின் நிதி நிர்வாகம், நிதி நிலைமை பற்றிய கண்ணோட்டம் ஆகியவை சிறந்தவை என்பதும் அவற்றைப் பிற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதும் தெரிகிறது என்று அறிக்கை வியக்கிறது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s