site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரஜினியின் ராணா ”முழு நீள சரித்திரப் படம்”!

Posted by sambala87(சூரியன்) on February 14, 2011

ராணா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சௌந்தர்யா ரஜினி கூறுகையில், “ராணா படத்தின் முக்கிய நாயகிகளுள் ஒருவராக தீபிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்துக்காக தனது தேதிகளை ஒதுக்கிக் கொடுத்துள்ளார் அவர். சில தினங்களுக்கு முன்புதான் அவர் நடிப்பது உறுதியாகியுள்ளது” என்றார்.

தீபிகா அளித்துள்ள பேட்டியில், “ரஜினி ஒரு திரையுலக சரித்திரம். அந்த மாபெரும் கலைஞருடன் நடிப்பதில் நான் பெருமைப்படுகிறேன். அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத வாய்ப்பு இது. இதற்காக சில வாய்ப்புகளை மகிழ்ச்சியுடன் விட்டுக் கொடுத்தேன்” என்றார்.

படத்தில் மேலும் ஒரு நாயகி உண்டு. அது த்ரிஷா என்று கூறப்படுகிறது. ஆனாலும் இந்தச் செய்தியை இன்னும் தயாரிப்பாளரோ, ரஜினியோ அல்லது இயக்குநர் ரவிக்குமாரோ உறுதிப்படுத்தவில்லை.

இதற்கிடையே, ராணாவின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்குகிறது. இந்தியாவின் பிரமாண்ட அரண்மனைகள் மற்றும் கோட்டைகளில் இந்தப் படம் எடுக்கப்பட உள்ளது. ரசிகர்கள் இதுவரை பார்த்திராத பல புதிய இடங்களை இந்தப் படத்தில் காணலாம் என இயக்குநர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் முழு நீள சரித்திரப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

(tt)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: