site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

2-ஜி வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை! :நீதிபதிகள்

Posted by sambala87(சூரியன்) on February 11, 2011

2-ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விசாரணையின்போது நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கூறியதாவது:

இந்த வழக்குக்கு இணையான வழக்கு எதுவும் இல்லை. அதனால், அதிகாரிகள் இந்த வழக்குக்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இந்த வழக்குக்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசு அளிக்க வேண்டும். இந்த முறைகேட்டில் தொடர்புடைய மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சிபிஐ முனைய வேண்டும்.

தாங்களே சட்டம் என நம் நாட்டில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சட்டத்தின் வலிமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் “போர்ப்ஸ்’ பத்திரிகையின் பட்டியலில் இருந்தாலும் சரி, கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி, அவர்களிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றனர்.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வான் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படவில்லை என இந்த வழக்கை தொடுத்த பொதுநல வழக்குக்கான மையத்தின் சார்பில் ஆஜரான பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.

அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டதாவது:

ஆதாயம் பெற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் விசாரிக்கப்படாதது வியப்பாக உள்ளது.

இந்த வழக்கில் 4 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆதாயம் பெற்றவர்களின் நிலை என்ன? இந்த முறைகேடு தொடர்பான சதியில் அவர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என நீதிமன்றத்துக்கு சிபிஐ தெரிவிக்க வேண்டும் என்றனர்.

சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இதற்கு பதிலளித்து கூறியதாவது: இந்த முறைகேட்டில் ஆதாயம் பெற்றவர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு மாதம் அவகாசம் அளியுங்கள். முன்னாள் அமைச்சர் ஆ.ராசா காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான குற்றப்பத்திரிகை மார்ச் 31-க்குள் தாக்கல் செய்யப்படும் என்றார். அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு முன் தொழில் நிறுவனங்கள் பெற்ற வங்கிக் கடன்கள் தொடர்பான பட்டியலை கே.கே.வேணுகோபால் படித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “விண்ணப்பங்களை சரியாகப் பரிசீலிக்காமலே வங்கிகள் எப்படி கடன் கொடுத்தன? தொலைத் தொடர்புத் துறைக்கு தொடர்பே இல்லாத ஒரு நிறுவனம் கூட வங்கிக் கடன் பெற்றுள்ளது எப்படி?’ என கேள்வி எழுப்பினர்.

2003-ல் தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) எடுத்த முடிவால் இந்த முறைகேடு நடைபெற்றுள்ளது என இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். டிராய் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சிபிஐக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

சிறப்பு நீதிமன்றம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசுடன் விவாதித்து 2 வாரங்களுக்குள் பதிலளிப்பதாக அட்டார்னி ஜெனரல் வாஹன்வதி உறுதி அளித்தார்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: