2ஜி ஊழல் விசாரணை கமிஷன் அறிக்கையின் தகவல்கள்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது தவறான நடைமுறை என்று நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன் தெரிவித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் குறித்து ஆய்வு செய்த நீதிபதி சிவராஜ் பாட்டீல் கமிஷன் அண்மையில் தனது அறிக்கையை அளித்தது. 143 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன.

முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது தவறான நடைமுறை என்று குறிப்பிட்டுள்ள கமிஷன், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஒளிவுமறைவற்றதன்மை கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

வெளிநாடுகளைப் போன்று தொலைத்தொடர்பு துறைக்கு விரிவான புதிய சட்டவிதிகள் வரையறுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்தைப் போன்று “ரேடியோ கம்யூனிகேஷன்ஸ் சட்டம்’ இயற்றப்படுவது சிறந்தது. அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரங்களுக்காக தன்னிச்சையான அமைப்பை உருவாக்க வேண்டும்.

ஓர் ஒப்பந்தமோ, உரிமமோ வழங்கப்படும்போது சட்டவிதிகள் முறையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதற்கான நடைமுறைகளில் ரகசியம் காக்கப்படாமல் ஒளிவுமறைவற்றதன்மை இருக்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களிலும் தகுதியானவற்றை மட்டுமேதேர்ந்தெடுக்க வேண்டும். இதில் முன்னுரிமைக்கு இடம் அளிக்கக்கூடாது.

அலைக்கற்றை ஒதுக்கீடு உரிமம் வழங்கப்பட்ட நிறுவனங்களின் பெயர்களை மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட வேண்டும். ஒவ்வொரு ஒதுக்கீட்டின்போதும் உரிமம் பெற்ற அனைத்து நிறுவனங்களின் பெயர், விவரங்களை மக்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துவது அவசியம்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் மக்களுக்குப் பயன்படும் வகையில் அதை முறையாகப் பயன்படுத்துகிறதா என்பது குறித்தும் தொலைத்தொடர்புத் துறை ஆய்வு நடத்த வேண்டும்.

அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏலம் விடும்போது விதிகளை நேர்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வரையறுக்கப்பட்ட விதிகளை அமல்படுத்தும்போது மூத்த அதிகாரிகள் அதனை ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டும். விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்னதாகவே தெரிவிக்கவேண்டும்.

முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, 2007 அக்டோபர் 17-ல் பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. முதலில் ஒப்பந்த கடிதம், அதைத் தொடர்ந்து உரிமமும், 3-வதாக வயர்லெஸ் உரிமமும் வழங்க டிராய் பரிந்துரைத்துள்ளதாக அந்த கடிதத்தில் ராசா குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த செய்திக் குறிப்பு, 2008 ஜனவரி 10-ல் தொலைத்தொடர்புத் துறை இணையதளத்திலும், பத்திரிகை தகவல் அலுவலகத்தாலும் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதே நாளில் 2-வது செய்திக்குறிப்பு அமைச்சக இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது தவறான நடைமுறை.

அமைச்சக செய்திக் குறிப்புகள் மக்களும், தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அறியும்வகையில் வெளியிடப்பட வேண்டும்.

நிரந்தர உறுப்பினர்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இப்போதைய உள்துறை கமிஷனை கலைத்துவிட்டு புதிய கமிஷன் அமைக்கப்பட வேண்டும். அதில் நிரந்தரமற்ற உறுப்பினர்களையும் நியமிக்க வேண்டும்.

விதிகளின்படி நேர்மையாக நடக்கும் அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை சிவராஜ் பாட்டீல் கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s