இஸ்ரோ ஊழல் : சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் விரைவில் ரத்து!

எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் விரைவில் ரத்து செய்யப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

70 மெகாஹெர்ட்ஸ் எஸ்-பாண்ட் அலைக்கற்றையை தேவாஸ் மல்டிமீடியா என்ற தனியார் நிறுவனத்துக்கு 20 ஆண்டுகளுக்கு ரூ.1000 கோடிக்கு இஸ்ரோ ஒதுக்கியதன் மூலம் அரசுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என செய்தி வெளியானது.

இதற்கு விளக்கம் அளிக்கும்வகையில் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன், இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் ஆகியோர் புது தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

தேவாஸ் நிறுவனத்துக்காக 2 செயற்கைக்கோள்களை ஏவ 2005 ஜனவரியில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டவுடன் இது குறித்து பிரதமருடன் விவாதிக்கப்பட்டது.

ஆனால், இதுவரை டிரான்ஸ்பாண்டர்களோ, அலைக்கற்றையோ அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை.

(டிரான்ஸ்பாண்டர் என்பது குறிப்பிட்ட சமிக்ஞைகளை பெற்று தானாகவே பதிலளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கருவி).

ஒப்பந்தம் செய்யப்பட்ட காலகட்டத்தில், எஸ்-பாண்ட் அலைக்கற்றையை பயன்படுத்தும் தொழில்நுட்பம் வேறு யாரிடமும் இல்லாததால் ஏலம் விடுவதற்கான அவசியம் எழவில்லை.

அதே நேரம் கேயூ-பாண்ட் டிரான்ஸ்பாண்டர்களை ஏலத்தில் எடுக்க அதிக நிறுவனங்கள் தயாராக இருந்ததால் அது ஏலம் விடப்பட்டது.

எனினும், அரசு அமைப்புகளுக்கு ஒலி-ஒளிபரப்புகளுக்காக அலைக்கற்றை தேவை அதிகரித்தது 2008-ல் உணரப்பட்டது. இதையடுத்து, தேவாஸ் உடனான ஒப்பந்தம் 2009 டிசம்பரில் மறுபரிசீலனை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வது என 2010 ஜூலையில் முடிவு செய்யப்பட்டது.

ரத்து செய்வதற்கான நடைமுறை அவ்வளவு சுலபமானதல்ல. ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. இதனால், அரசுக்கு இழப்பு என்ற கேள்விக்கே இடமில்லை என்றார்.

பிரதமர் அலுவலகம் மறுப்பு:

எஸ்-பாண்ட் அலைக்கற்றையை தேவாஸ் நிறுவனத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை முடிவெடுக்கவில்லை. எனவே, அரசுக்கு வருவாய் இழப்பு என்ற கேள்வியே எழவில்லை. பத்திரிகை செய்திகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என பிரதமர் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s