site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இஸ்ரோவில் ரூ.2 லட்சம் கோடி ஊழல்?

Posted by sambala87(சூரியன்) on February 8, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததால் நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை தாக்கல் செய்திருந்தது. 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு சர்ச்சை ஓய்வதற்குள் மற்றொரு சர்ச்சை கிளம்பியுள்ளது. இஸ்‌ரோவிலும் ( இந்திய வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் ) அலைவரிசை ஒதுக்கீட்டில் மு‌றைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.

இஸ்ரோ அனுப்பும் செயற்கை கோள்களில் இருந்து பெறப்படும் அலைவரிசைகள் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது. இந்த அலைக்கற்றைகளை வர்த்தக ரீதியாக ஒதுக்கீடு செய்ய இஸ்ரோவால் உருவாக்கப்பட்டது தான் ஆண்ட்ரிக்ஸ் என்ற நிறுவனம். இந்நிலையில் கடந்த 2005 ம் ஆண்டு தேவாஸ் மல்டி மீடியா என்ற தனியார் நிறுவனம் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 70 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை வாங்க ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. 20 ஆண்டுகள் வரை இந்த அலைவரிசையை பயன்படுத்திக் கொள்ள ரூ. 1000 கோடி மட்டுமே கட்டணமாக பெறப்பட்டது.

ஆனால் இதே இஸ்ரோ பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். டெலிபோன் நிறுவனங்களுக்கு 20 மெகா ஹெட்ஸ் அலைவரிசைகளை ஒதுக்கியது. இதற்காக ரூ. 12 ஆயிரத்து 847 கோடி கட்டணமாக பெற்றது. ஆனால் தேவாஸ் மல்டி மீடியா நிறுவனத்துக்கு 70 மெகாஹெட்ஸ் அலை வரிசையை விற்று அதற்கு கட்டணமாக ரூ. 1000 கோடி மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஒப்பந்தம் விவகாரங்களை மத்திய பொது கணக்கு தணிக்கை துறை ஆய்வு செய்தது. ஆய்வு முடிந்து தணிக்கை துறை அறிக்கையை தயாரித்து உள்ளது. அதில் தேவோஸ் நிறுவனத்துக்கு சொற்ப ‌தொகைக்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் இஸ்ரோவுக்கு ரூ. 2லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன்,

இந்த விவகாரம் பற்றி பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்துவதுடன்,இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பை மீட்பதற்கான நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிஏஜி அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கும் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் என்பது வெறும் 4.4 மெகாஹெர்ட்ஸ் சம்பந்தப்பட்டதுதான். 3ஜி விவகாரம் வெறும் 50 மெகாஹெர்ட்ஸ்தான். அதுவே ரூ.67 ஆயிரம் கோடிக்கு ஏலம் போனது. இதன் மூலம் எஸ்-பேண்ட் அலைக்கற்றையில் ஏற்பட்டிருக்கும் இழப்பை கணிக்க முடியும்’ என்றார் நிர்மலா சீதாராமன்.

இடதுசாரிகள் கோரிக்கை:

அதேபோல், இந்த முறைகேடுகள் குறித்து முழு அளவிலான விசாரணை நடத்த வேண்டும் என இடதுசாரி கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

தில்லியில் இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி,

“இது ஒரு புதிய பிரச்னை. நடந்திருப்பது புதிய ஊழல். இந்த ஊழல் நடந்திருக்கும் இஸ்ரோ பிரதமரின் கட்டுப்பாட்டில் இருக்கும் விண்வெளித்துறையின் கீழ் வருகிறது’ என்று கூறினார்.

இதே போன்ற கருத்தை தெரிவித்த இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் து.ராஜா,

“தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலின் வேறொரு பரிமாணத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றன’ என்று கூறினார். நான்கு இடதுசாரி கட்சிகளும் சேர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று ஆர்எஸ்பி தலைவர் அவனி ராய் கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கோரப்படும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவா அல்லது வேறொரு குழுவா என்பது பற்றி ஆய்வு செய்து முடிவெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

(dmdi)

One Response to “இஸ்ரோவில் ரூ.2 லட்சம் கோடி ஊழல்?”

  1. nadu

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: