site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

2 ஜி ஊழல்: ஆ.ராசா கைது …!!!!

Posted by sambala87(சூரியன்) on February 2, 2011

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மத்திய புலனாய்வுத் துறையால் தில்லியில் கைது செய்தது.

ராசாவுடன் முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெகுராவும், ராசாவின் முன்னாள் தனிச்செயலர் ஆர்.கே.சந்தோலியாவும் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராசாவிடம் காலை 4-வது முறையாக சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த டிசம்பர் 24 மற்றும் 25-ம் தேதிகளிலும், ஜனவரி 31-ம் தேதியும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2 ஜி ஊழல் தொடர்பாக அவரை சிபிஐ கைது செய்துள்ளது.

பெரம்பலூரில் வன்முறை

இந்தச் செய்தி பரவியதும் ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில் அவரது ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் கல்வீசித் தாக்கப்பட்டன. இதைத் தடுக்க வந்த போலீஸார் மீது வன்முறைக் கும்பல் கற்களை வீசித் தாக்கியது.

இந்த வன்முறையை அடுத்து பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வன்முறைக் கும்பல் டயர்களைப் போட்டு தீவைத்துக் கொளுத்தியதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

சட்டம் அதன் கடமையைச் செய்துள்ளது

2 ஜி ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டது திமுகவுடனான உறவை பாதிக்காது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இப்போது நடந்துள்ளது சட்டம் அதன் கடமையைச் செய்துள்ள ஒரு நிகழ்வு என காங்கிரஸ் பொதுச்செயலர் ஜனார்தன் திவிவேதி தெரிவித்தார்.

இதுபோன்று அனைத்து வழக்குகளும் புலனாய்வு செய்யப்பட்டு, முறையாக விசாரிக்கப்படும் என்று காங்கிரஸ் முன்னதாகக் கூறியிருந்தது என திவிவேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: