site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இந்தியாவில் இனி குடிசைகளே இல்லாத நகரங்கள்!

Posted by sambala87(சூரியன்) on February 1, 2011

நாடு முழுவதும் சேரிகள் இல்லாத நகரத்தை உறுதி செய்யும் திட்டத்துக்கு ரூ.6000 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

குடிசைகள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கத்துடன் கடந்த 2009-ல் ராஜீவ் வீடு கட்டம் திட்டம் (ஆஏஒய்) கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆகும் செலவில் பாதியளவு தொகையை மத்திய அரசும், மீதித் தொகையை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும், நகராட்சி அமைப்புகளும், பயனாளிகளும் சேர்ந்து அளிக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான மாதிரியை வடிவமைக்கும் பணி இப்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து திட்டத்தை துரிதமாகச் செயல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இப்போதைய நிலையில் இந்தியாவில் 2 கோடியே 50 லட்சம் பேருக்கு வீடுகள் இல்லாத நிலை உள்ளது. அவர்கள் குடிசைகளிலும், சாலையோரங்களிலும் பரிதாபமான வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மக்களுக்காக ராஜீவ் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 கோடி வீடுகளை கட்டி வழங்குவதற்கு முடிவெடுக்கப்பட்டு, அதற்கு ரூ.6000 கோடியும் ஒதுக்கப்படும் என்று 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நிதி ஒதுக்கீடுக்கு அடுத்த சில தினங்களில் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு ஏதோ கடனுக்காகக் கட்டிக்கொடுக்கப்படாது. இந்த வீடுகள் இரு அறைகள், சமையல் அறை, குளியல் அறை என அடிப்படையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருக்கும். ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டுமானச் செலவு ரூ.3 லட்சம் ஆகும்.

இதுகுறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியது:

ராஜீவ் வீடு கட்டும் திட்டம் இப்போது செயலாக்க நிலையில் உள்ளது. இத்திட்டம் குடிசைகளில் வசித்து வரும் நகர்ப்புற ஏழைமக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இத்திட்டத்தின் பயனைப் பெற விரும்பும் மாநிலங்கள் ஓராண்டுக்குள் சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். இந்த சொத்துரிமை சட்டத்தின் மாதிரி ஒன்றை நாங்கள் தயாரித்துள்ளோம். இதை அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கவுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகள் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. திட்ட அமலாக்கத்தில் மாநில அரசுகள், நகராட்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் ஆகியவற்றை பங்குபெறச் செய்யப்படவுள்ளன. நாடு முழுவதும் நகரங்களில் உள்ள குடிசைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றார்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: