site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் தீபிகா …!!!

Posted by sambala87(சூரியன்) on January 30, 2011

ராணா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் தீபிகா நடிப்பார்கள் என்று தெரிகிறது.

சுல்தான் தி வாரியர் என்ற பெயரில் சௌந்தர்யா ரஜினி எடுத்து வந்த படம் கைவிடப்பட்டுள்ளது. இப்போது கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் புத்தம் புதிதாக ஒரு படத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதில் அனிமேஷன் சமாச்சாரங்கள் இல்லை என்றும், படையப்பா மாதிரி முழு நீள ரஜினி படம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜினி 3 வேடங்களில் நடிக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் பாணி படமாக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் ராணா உருவாகிறது. ரஜினிக்கு இதில் இரண்டு ஜோடிகள். தீபிகா படுகோனே, அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து ரஜினியின் மக்கள் தொடர்பாளரும், ராணாவின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவருமான ரியாஸ் கூறுகையில், “இந்த இரு நாயகிகளுடனும் பேசி வருகிறோம். விரைவில் செய்தியை அறிவிப்போம்”, என்றார்.

ரஜினியுடன் நடிக்க வந்துள்ள இந்த பெரிய வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்பதால், கால்ஷீட் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருகிறாராம் தீபிகா படுகோன்.

‘நடித்தால் இனி ரஜினியுடன்தான்… வேறு தமிழ் ஹீரோக்களுக்கு இப்போதைக்கு கால்ஷீட் தரும் ஐடியா இல்லை’ என ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்தவர் அனுஷ்கா என்பது குறிப்பிடத்தக்கது!

(tt)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: