site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

இப்படியும் ஒரு ஊராட்சி தலைவர்….

Posted by sambala87(சூரியன்) on January 29, 2011

குடிநீர் பிடிக்க இரு சக்கர வாகனத்தில் தினமும் சென்று ஹாரன் அடித்து மக்களை அழைப்பதும், ஊராட்சி பணிகளை தானே முன் வந்து நீக்குவது என ஊராட்சி தலைவரின் பணி வியப்புஅளிக்கிறது.

திருப்புல்லாணி ஒன்றியம் களிமண்குண்டு ஊராட்சி தலைவர் ராஜூ(46). வாக்களித்த மக்களுக்கு தொண்டு செய்வதற்காகவே தான் செய்த மீன்பிடி தொழிலை கை விட்டார். இவர் தினமும் அதிகாலையில் குடி நீர் மேல்நிலை தொட்டியில் நீர் ஏற்றுவது, தெரு குடிநீர் குழாய்களுக்கு நீர் திறந்து விடுவது,இரு சக்கர வாகனத்தில் சென்று ஹாரன் அடித்தப்படி தூங்கும் மக்களை எழுப்பி குழாயில் குடிநீர் வந்த தகவலை அறிவிப்பது என அன்றாட பணியாக செய்து வருகிறார். குடிநீர் குழாய் பழுது பார்ப்பது முதல் தெருவிளக்குகள் பராமரிப்பு செய்வது வரை அனைத்து வேலைகளையும் இவரே செய்து வருகிறார்.

ஊராட்சி தலைவர் கூறியதாவது:
ஊராட்சி பிரச்னைகளை தீர்க்க மற்றவர்களை எதிர்பார்ப்பது கிடையாது.முடிந்த வரை நானே அந்த பணியை செய்து விடுகிறேன். காலையில் நான்கு மணிக்கே எழுந்து பணியை செய்ய துவங்கி விடுவேன். மக்களுக்கு தொண்டு செய்வதால் எனக்கு மன நிறைவு ஏற்படுகிறது,என்றார். விருது வாங்குவோர் உண்மையில் மக்கள் பணியாற்றினரா என்றில்லாமல் ,சிபாரிசு பேரில் விருதுகளை வாரி வழங்கும் மாவட்ட நிர்வாகம், கிராம மக்களின் சேவையை மன நிறைவோடு செய்துவரும் இவர் போன்றவர்களுக்கு விருதுகள் வழங்க முன் வர வேண்டும்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: