வெகு விரைவில் மத்தியிலும் தேர்தல் நடக்கும்…

“”தமிழகத்தில் மட்டுமல்ல வெகு விரைவில் மத்தியிலும் தேர்தல் நடக்கும். மத்தியில், பா.ஜ., தலைமையில் ஆட்சி ஏற்படும். அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு, அதில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம்,” என்று பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி பேசினார்.

ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி தாமரை யாத்திரை துவங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஓன்பாதாயிரம் கி.மீ., தூரம் நடந்த இந்த யாத்திரையின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை, மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பா.ஜ., தேசிய தலைவர் நிதின் கட்காரி பேசியதாவது:

தமிழகத்தில் ஊழலும், விலைவாசி உயர்வும் தான் முக்கிய பிரச்னை என்று என்னை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். ஸ்பெக்ட்ரம் ஊழல் தி.மு.க.,வை பிரபலப்படுத்திவிட்டது.

விலைவாசி மக்களை வாட்டி வதைக்கிறது. கடந்த 2010ம் ஆண்டு ஊழல் ஆண்டாக சென்றுள்ளது.ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆதர்ஷ் என ஊழல் பட்டியல் நீள்கிறது. இரண்டரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம். சுப்ரீம் கோர்ட்டும், எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் சுவிஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ள, 22 லட்சம் கோடி டாலர் கருப்பு பணத்தை மீட்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால், கருப்பு பணத்தை குவித்து வைத்துள்ளவர்கள் பட்டியலை வெளியிடாமல், அவர்கள் மீது காங்கிரஸ் அரசு அன்பு செலுத்துகிறது.

தேச துரோகிகளுக்கு இந்த அரசு துணை போகிறது. தமிழகத்தில் மட்டுமல்ல வெகு விரைவில் மத்தியிலும் தேர்தல் நடக்கும். பா.ஜ., தலைமையில் ஆட்சி ஏற்படும். அப்போது கருப்பு பணத்தை மீட்டு, அதில் நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவோம் .

இலங்கை தமிழர் பிரச்னை ஒரு தேசிய பிரச்னை. இலங்கை தமிழர்கள் அடிப்படை உரிமைகளை பெற, பார்லிமென்ட்டில் பா.ஜ.,வின் 165 எம்.பி.,க்களும் குரல் கொடுப்பார்கள். ஐ.நா., சபை உரிமை குழுவிற்கு இப்பிரச்னையை கொண்டு செல்வோம்.

நாட்டின் பொருளாதார சூழ்நிலை உயர, நதிநீர் பிரச்னை தீர, ஏழை மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெற தமிழக மக்கள் பா.ஜ.,விற்கு முழு ஆதரவு தர வேண்டும்.இவ்வாறு நிதின் கட்காரி பேசினார். தமிழகம் முழுவதும் இருந்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்கள் இதில் கலந்து கொண்டதால், மீனம்பாக்கம் ராணுவ மைதானம் நிரம்பி வழிந்தது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s