site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

2011 உலககோப்பை இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு – சுமித்

Posted by sambala87(சூரியன்) on January 28, 2011

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் கூறியுள்ளார். பிப்.19 முதல் ஏப்.2 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடக்கிறது.

உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 22 தினங்களே இருப்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் ஒருநாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இழந்தது. இந்திய அணி தொடரை இழந்தாலும் சிறப்பாகவே விளையாடியது. இதனால் இந்திய அணியை சுமித் உயர்வாக கருதியுள்ளார். உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், தென்ஆப்பிரிக்காவும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 அணிகள் இடம் பெற்றுள்ள பி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளன. ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் இரண்டு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதிபெறும்.

உலககோப்பை போட்டி தொடங்க இன்னும் 22 தினங்களே உள்ள நிலையில், போட்டி குறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் கூறுகையில்;

என்னை பொறுத்த வரை போட்டியை நடத்தும் நாட்டுக்கு உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன். இந்திய துணை கண்டத்தில் உள்ள நாடுகளில் அந்தந்த அணிகள் சிறப்பாக விளையாட கூடியது. இதனால் இந்தியாவுக்குத் தான் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்.

உலக கோப்பையை வெல்ல 5 அல்லது 6 நாடுகளுக்கு வாய்ப்பு உள்ளது. இதில் இந்தியாவுக்கு அதிகமாக வாய்ப்பு உள்ளது. உலக கோப்பை போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.

(co)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: