10, +2 மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு

எதிர்வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், மக்கள் மத்தியில், எந்த வகையிலும் தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதற்காக, ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு வினாத்தாளை, சுலபமாக தயாரிக்க, கல்வித்துறை மூலம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக மாணவர்களின், முக்கிய தேர்வுகளாக கருதப்படும், ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு வரும் மார்ச் முதல் ஏப்ரல் வரை நடக்கிறது. இந்த இரு அரசு பொதுத்தேர்வுகளிலும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்கவுள்ளனர்.மாநிலத்தில் கல்வித்தரத்தை அதிகரிக்கவும், மாணவர்களின் கல்விச்சுமையை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், வினாத்தாளை படிக்க கூடுதல் நேரம், பாடத்திட்டம் மாற்றம் என்று பல்வேறு திட்டங்களை தி.மு.க., அரசு கொண்டு வந்தது.இன்னும் இரண்டு மாதத்தில் துவங்கவுள்ள, ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வுகளை சிறப்பான முறையில் எதிர்கொள்ள மாணவ, மாணவியர் தயாராகி வருகின்றனர்.தமிழகத்தில், விரைவில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தல் எதிரொலியாக நடக்க இருக்கும் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., அரசு பொதுத்தேர்வு வினாத்தாள், சுலபமாக இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல்வித்துறை வட்டார உயர் அதிகாரிகள் கூறியதாவது:எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அரசு மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு தரப்பினருக்கும் சம்பள உயர்வு, புதுப்புது திட்டங்கள், இலவசங்கள் என பல்வேறு புதிய அறிவிப்புகள் அரசால் வெளியிடப்பட்டு வருகிறது.

எந்த வகையிலும்ல தி.மு.க., ஆட்சி மீது மக்களுக்கு அதிருப்தியோ, கெட்ட பெயரோ வந்து விடக்கூடாது என்பதை மனதில் வைத்து, ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான், கல்வித்துறையில் விரைவில் வரவுள்ள, ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வுகளின் வினாத்தாளை, சுலபமாக தயாரிக்க ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி.,யில், மொத்தம், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கான வினாத்தாள் கடினமாக இருந்துவிட்டால், அவர்கள் பெற்றோரின், ஒட்டுமொத்த அதிருப்தியையும் சந்திக்க நேரிடும் என்பதால், எப்போதும் இல்லாத அளவுக்கு வினாத்தாளை சுலபமாக தயாரிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகையால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர், தேர்தல் காரணமாக கடினமில்லா வினாத்தாளை எதிர்பார்க்கலாம், என்றனர்.

(dm)

Advertisements

One thought on “10, +2 மாணவர்களுக்கு ஜாக்பாட்: கடினமில்லா வினாத்தாள் தயாரிக்க உத்தரவு”

  1. தமிழகத்தை ஒழித்துக்கட்டி விட்டுத்தான் உடன் பிற்ப்புகள் ஓய்வார்கள் போல..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s