தி.மு.க. தொகுதி பங்கீடு : காங்கிரசுக்கு60, பா.ம.க.,வுக்கு 24 தொகுதிகள்?

சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க., அணி, இறுதி வடிவம் பெற்று தயாராகி விட்டது. காங்கிரஸ் – பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தி.மு.க., எக்ஸ்பிரசில் பயணம் செய்வது உறுதியாகி விட்டதாக, அக்கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகளை, அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. முதல்கட்டமாக, எந்த கட்சி, எந்தப் பக்கம் என்பதில் குழப்பம் நீடித்தது. தற்போது, தமிழக அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக, தி.மு.க., கூட்டணியில் தெளிவு பிறந்துள்ளது. தி.மு.க.,வும், காங்கிரசும் இணைந்து தேர்தலை சந்திப்பது உறுதியாகி உள்ளது. இதற்கான ஒப்புதல், டில்லியில் இருந்து வந்துவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த இழுபறியாக இருந்த பா.ம.க.,வும், தி.மு.க., கூட்டணி ரயிலில் பயணம் செய்ய தயாராகி விட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளும், தி.மு.க.,வுடன் பயணம் செய்ய தயாராகி விட்டன. இக்கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கும் பொறுப்பு தி.மு.க., தலைமையிடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றதால், இடங்களை பகிர்ந்து கொள்வதில் தி.மு.க., பெரும் சிரமப்பட வேண்டியிருந்தது. இந்த முறை அந்தச் சிக்கல் இருக்காது என தெரிகிறது.

எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பதில் முதல்கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்து, ஓரளவுக்கு இடங்கள் முடிவாகி விட்டன. அதன்படி, தி.மு.க., 128 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு 60 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. பா.ம.க.,வுக்கு 24 இடங்களும், 2013ம் ஆண்டு காலியாகவுள்ள ராஜ்யசபா இடங்களில் அன்புமணிக்கு ஒன்றும் வழங்கப்பட உள்ளது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு 12, கொ.மு.க., – 4, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் புரட்சி பாரதம் கட்சிகளுக்கு தலா மூன்று இடங்கள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ், 2006 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில், 48 இடங்களில் போட்டியிட்டது. இந்த முறை, 12 இடம்கூடுதலாக வழங்கப்படுகின்றன. அக்கட்சிக்கு, அ.தி.மு.க., அணியிலும், “டிமாண்ட்’ இருந்ததால், அக்கட்சியை தக்க வைக்க தி.மு.க., சற்று தாராளம் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க., அணியில் இருந்து காங்கிரசுக்கு, 75 சீட் வரை தர பேரம் பேசப்பட்டுள்ளது. அதனால், வேறு வழியின்றி காங்கிரசுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்க, தி.மு.க., தரப்பில் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. தி.மு.க., அணியில் கொங்கு முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள், தி.மு.க., சின்னத்திலேயே போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனால், தி.மு.க., போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை, 138 ஆக கணக்கிடலாம். மொத்தத்தில், தி.மு.க., கூட்டணி எக்ஸ்பிரஸ், தேர்தலுக்கு தயாராகி விட்டது. அடுத்தமாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பின், தேர்தல் தொகுதிகள் எவை, எவை என்பது முடிவு செய்யப்பட்டு, தேர்தல் பணிகள் சூடுபிடிக்கும் என தெரிகிறது. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாததால், கூட்டணி விஷயத்தில் அந்த அணி பின்தங்கி உள்ளது.

 

 

 

 

 

 

(dm)

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s