தொப்பையை குறைக்க : தினமும் ஆறுவேளை உணவு, எளிய உடற்பயிற்சி

குனிந்து, நிமிர்ந்து வீட்டை பெருக்கி, கை, கால் அசைய அம்மிக்கல்லையும், ஆட்டுக்கல்லையும் சுழற்றிய பெண்கள்… தேவதைகளாய், மெல்லிய மேனியுடன் வலம் வந்தனர். இயந்திரங்களோடு, இயந்திரமாக மாறிய பின், பெரும்பாலான பெண்களுக்கு “தொப்பை’ பெரிய பிரச்னையாகி விட்டது. என்னதான் அலுவலக வேலை செய்தாலும், அவற்றில் உடல் உழைப்பு இல்லாததால், பெண்களுக்கு வயிறு, இடுப்பு, தொடைப் பகுதிகளில் கொழுப்பு படிந்து அழகை கெடுக்கிறது. அதோடு உடல்ரீதியான பிரச்னையையும், சோம்பலையும் ஏற்படுத்துகிறது. மனம் சரியாக இயங்க, உடலை பாதுகாக்கும் ரகசியத்தை சொல்கின்றனர், மதுரை குடும்பத்தலைவிகள்.

திலகா (விளாங்குடி) : நான் அழகுகலை நிபுணராக இருக்கிறேன். கடந்த ஓராண்டாக எனது உடல்நலத்தில் கவனம் செலுத்தாததால் 10 கிலோ வரை எடை அதிகமாகி விட்டது. தற்போது இரண்டு மாதங்களாக உடற்பயிற்சி நிலையத்துக்கு செல்கிறேன். 20 நிமிடங்கள் “டிரெட் மில்’ பயிற்சி, சைக்ளிங், தொடை, வயிற்றுப் பகுதிகளுக்கு தனித்தனி பயிற்சி எடுத்து வருகிறேன். உணவிலும் கவனம் கவனம் செலுத்துகிறேன்.

நித்யா (அரசரடி) : திருமணத்துக்கு முன்னும், பின்னும் உடல்எடையை சீராக பாதுகாக்கிறேன். திருமணத்துக்கு முன் லண்டனில் இருந்தபோது, தினந்தோறும் உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தேன். தற்போது மதுரையில் இருக்கிறேன். வீட்டில் சும்மா இருந்தால், உடல் குண்டாகி விடும். அடுத்தமாதம்பெங்களூரு செல்கிறேன். அதுவரை உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்வேன். உடல் எடையை பாதுகாப்பதற்கு, உணவு கட்டுப்பாடும் அவசியம்.

அனிதா கதிரவன் (அண்ணாநகர்) : நான் வீட்டில் இருந்தபடியே, கம்ப்யூட்டரில் வேலை செய்கிறேன். உட்கார்ந்தே வேலை பார்த்ததால், எனது உடல் அமைப்பே மாறி விட்டது. கால்மூட்டு பலமின்றி, நடக்க கூட சிரமப்பட்டேன். கடந்த இரண்டாண்டுகளாக, மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டலில் உள்ள உடற்பயிற்சி நிலையத்திற்கு செல்கிறேன். 76 லிருந்து 67 கிலோவாக குறைந்துள்ளேன். இன்னும் எடையை குறைக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்வதால், மனமும் புத்துணர்வாக இருக்கிறது. எந்த வேலையையும் எளிதாக செய்ய முடிகிறது. அமெரிக்காவில் “பிட்னஸ்’ பயிற்சியாளர் படிப்பை முடித்து, மதுரையில் நியூலைப் உடற்பயிற்சி மையத்தை நடத்திவரும் டொமினிக் கூறியதாவது: சிங்கப்பூரில் வேலை பார்த்த பின், மதுரையில் தனியாக பயிற்சி மையம் ஆரம்பித்தேன். நான் தேசிய தடகள வீரர் என்பதால், உடற்பயிற்சியின் மீது ஈடுபாடு இருந்தது. மதுரையில் பெண்களுக்கான மையங்கள் மிகவும் குறைவாக உள்ளது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் பெண்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அதே போல ஒருநாளைக்கு மூன்று வேளை மொத்தமாக உணவு உண்பதில்லை. ஆறு அல்லது ஏழு வேளையாக பிரித்து சாப்பிடுகின்றனர். இதனால் செரிமானத்திற்கும் எளிது, வயிறும் லேசாக இருக்கும். முக்கியமாக அடிவயிற்றில் கொழுப்பு படியாது. ஓட்ஸ், முளைகட்டிய தானியங்கள், காய்கறி, கீரைகளை உணவில் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் சாதத்தை குறைப்பது மிகவும் நல்லது. இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடக்கூடாது.

தூக்கத்தின் போது, செரிமானம் குறைவாக நிகழ்வதால், சக்தி முழுதும் கொழுப்பாக அடிவயிற்றில் சேமிக்கப்பட்டு, நாளடைவில் தொப்பையாகி விடும். இரவு தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாக சாப்பிட்டு முடிக்க வேண்டும். உடல்எடையை பாதுகாப்பதற்கு அழகிற்காக மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்காகவும் தான் என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும், என்றார்.

Advertisements

One thought on “தொப்பையை குறைக்க : தினமும் ஆறுவேளை உணவு, எளிய உடற்பயிற்சி”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s