site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மு.க. அழகிரி : நான் ராஜிநாமா செய்வதாக கூறவில்லை!

Posted by sambala87(சூரியன்) on January 19, 2011

திமுக தென்மண்டல அமைப்புச் செயலர் பதவியையும், மத்திய அமைச்சர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக தான் கூறவில்லை என மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.

தில்லி புறப்படும் முன் சென்னை விமானநிலையத்தில் அழகிரி செய்தியாளர்களிடம் பேசினார். ராஜிநாமா செய்வதாக வெளியான தகவல்களுக்கு திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதி ஏற்கனவே பதிலளித்துவிட்டார் என அப்போது அழகிரி தெரிவித்தார்.

கட்சிப் பதவி கேட்டு பழக்கமில்லை. எனினும் கட்சியில் எந்தப் பதவி கொடுத்தாலும், அதை ஏற்றுக்கொண்டு, திறமையாகப் பணியாற்றுவேன் என்றார் அவர்.

மாற்றி அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் யாராவது சேர்க்கப்படுவார்களா என அழகிரியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, திமுகவுக்கு அமைச்சர் பதவிகள் குறித்து பேச நான் என்ன பிரதமரா எனத் திருப்பிக் கேட்டார்.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் காரணமாக முன்னாள் அமைச்சர் ராசா மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லை என்றும் அழகிரி தெளிவுபடுத்தினார்.

(di)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: