site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

பத்தாண்டுகளாக நடக்கும் அதிசயம்…

Posted by sambala87(சூரியன்) on January 10, 2011

மழைக் காலங்களில் அகதிகளாக வீட்டுக்கு வரும் ஆமைகள், மழைக்காலம் முடிந்ததும் திரும்பிச் சென்றுவிடும் என்ற நிலை மாறி, தற்போது மழைக்காலம் முடிந்தும் ஆமைகள் திரும்பவில்லை. இதனால்,மேலும் மழை நீடிக்கும் என, வீட்டின் உரிமையாளர் நம்பி வருகிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், திருப்பரையார் பல்லா கல்லும்கடவு கிராமத்தைச் சேர்ந்தவர் அஷ்ரப். இவரது மனைவி அயிஷா பீவி. இவர்களது வீடு வயல்வெளிக்கு மிக அருகே அமைந்துள்ளது. இவர்களது வீட்டுக்கு, மழைக் காலங்களில் ஆமைகள் வருவதுண்டு. அவை மழைக்காலம் முடிந்ததும் மீண்டும் வயல்வெளிகளை தேடிச் சென்று விடும்.

இவ்வாறு, பத்தாண்டுகளாக ஒவ்வொரு மழைக்காலத்தின் போதும் நடப்பது வழக்கம். அதேபோல், இவ்வாண்டும் மழைக்காலம் துவங்கும் போது ஆமைகள் அவரது வீட்டைத் தேடி வந்தன. வழக்கமாக வீட்டுக்குள்ளேயே வந்து தங்கி விடும் ஆமைகள் இவ்வாண்டு, வீட்டின் படிகளை அஷ்ரப் சற்று உயர்த்தி கட்டி விட்டதால், வீட்டுக்குள் வர முடியாமல் அவை படியின் அருகேயே தங்கி விட்டன.

வீட்டில் இருந்து கிடைக்கும் அரிசி சாதம், மீன் போன்றவற்றை தீனியாக சாப்பிட்டு வாழ்ந்து வரும் ஆமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல, நூறுக்கும் மேற்பட்ட ஆமைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மழைக்காலம் துவங்கியதும் எங்கிருந்தோ அஷ்ரப் வீட்டை நோக்கி வரும் ஆமைகள், வேறு யார் வீட்டுக்கும் செல்வதில்லை.

வழக்கமாக அவை மழைக்காலம் முடிந்ததும் (நவம்பர் மாதத்திற்கு முன்னால்) அங்கிருந்து தங்களது ஜாகையை மாற்றிக் கொள்வது வழக்கம். ஆனால், இப்போது ஜனவரி மாதம் துவங்கியும் அஷ்ரப் வீட்டில் இருந்து அவை கிளம்பாமல் உள்ளது அவருக்கு ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது. இதன் மூலம், இன்னும் மாநிலத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆமைகள், சொல்லாமல் சொல்வதாக அவர் நம்புகிறார்.கிளி, எலி, ஆக்டோபஸ் ஆகிய ஜோதிடங்களைப் போல் இப்போது ஆமை ஜோதிடமும் துவங்கியாச்சா…? மழை வருகிறதா என பார்க்கலாம்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: