site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

ஊழலை ஒழிப்பதற்கு காங்கிரஸ் முக்கியத்துவம்?

Posted by sambala87(சூரியன்) on January 9, 2011

ஊழலை ஒழிப்பதற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் அளிக்கும். ஊழல் மீதான நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் கட்சி, இனி வார்த்தைகளில் பேசாது; செயல்களில் மட்டுமே காட்டும். ஊழலை ஒழிக்க நான் தெரிவித்த ஐந்து அம்ச திட்டத்தை வரவேற்ற பிரதமர் மன்மோகன் சிங், அதை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். ஊழலை ஒழிக்கும் விஷயத்தில் அவர் மிகவும் உறுதியாக உள்ளார். – இது, டில்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அக்கட்சியின் ஏகபோக தலைவி சோனியா ஆற்றிய ஆவேச உரையின் தம்மாந்துண்டு பகுதி.

நீதிக்காகவும், நேர்மைக்காகவும், ஊழலை எதிர்த்தும் கிளம்பியிருக்கிற அன்னையின் இந்த உரையைக் கேட்டதுமே, காங்கிரஸ் வரலாறு தெரிந்தவர்கள் சிலிர்த்திருப்பார்கள். சோனியாவின் வரலாறு தெரிந்தவர்கள்…?

வழக்கம்போல, முதலிலேயே சொல்லிவிடுகிறேன்: எனக்கு சோனியாவின் வரலாறு தெரியாது. ஆனால், சில கேள்விகள் இருக்கின்றன கேட்பதற்கு. பதில் தெரிந்தவர்களுக்கு காங்கிரசில் இடம் கிடைக்கும். தெரியாதோருக்கு என் இதயத்தில் இடம் கிடைக்கும்.

கடந்த 1999ம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சி கவிழ்ந்தபோது, வெறும் 140 எம்.பி.,க்களை மட்டும் “கை’வசம் வைத்துக்கொண்டு, தனக்கு 272 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக, அப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனிடம் போய் (குறில், நெடில் இரண்டும் தகும்) சொன்னது எதற்காக?

உலகப் புகழ் பெற்ற போபர்ஸ் ஊழல் வழக்கில், சொந்த ஊர்க்காரரான குவாட்ரோச்சியை காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள், ஐந்தாம் வகுப்பு குழந்தைக்கு கூட தெரியும். அதைப் பற்றி நான் வேறு பிரஸ்தாபிக்க வேண்டியதில்லை. அவர் மீதான வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கும்படி சி.பி.ஐ., மனுத் தாக்கல் செய்திருப்பதே சாட்சி.

ஊழல் ஒழிப்பு வெறும் பேச்சாக இருக்காது எனக் கொந்தளித்துள்ள சோனியா; தன் மனைவி பெயரில் நடத்திவந்த அறக்கட்டளைக்கு, காங்கிரஸ் எம்.பி.,க்களிடம் இருந்து கோடி கோடியாக நன்கொடை பெற்ற, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் கோபல்சுவாமியால் பரிந்துரைக்கப்பட்ட, நவீன் சாவ்லாவை தலைமைத் தேர்தல் கமிஷனராக நியமித்தது தகுமா?

ஊழலை ஒழிக்க ஐந்து அம்ச திட்டம் அறிவித்துள்ள சோனியா; கேரளாவில் நடந்த பாமாயில் இறக்குமதி ஊழல் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற பி.ஜே.தாமசை, ஊழலை ஒழிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட தலைமை விஜிலன்ஸ் கமிஷனர் பதவியில் நியமித்தது நியாயமா?

ஊழல் ஒழிப்பின் புதிய அவதாரமான சோனியா, இந்தியாவையே அதிர்ச்சியில் உறையவைத்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி வாயே திறக்காததன் காரணம் விளக்கப்படுமா?

இந்தியாவின் ரிமோட் கன்ட்ரோலாக இருக்கும் சோனியா; இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான விமானங்களில் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குப் பயணித்ததாக புகார் எழுந்துள்ளதே. இதன் பின்னணி என்ன?

இப்படி ஏராளமான கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எழுதும்போது நினைவில் இருந்தவற்றை மட்டும் தொகுத்துள்ளேன். ஊழலை ஒழிப்பதற்காக தற்போது சோனியா எடுத்துள்ள புதிய அவதாரத்தைச் சிலாகிப்பதற்கு முன், அவர் எடுத்த இந்த பழைய அவதாரங்களையும் சிந்திக்க வேண்டுகிறேன்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: