இந்திய ஐ.டி., தொழில் நிறுவனங்களுக்கு புதிய ஆபத்து!

வெளிநாட்டு பொருட்கள் மீது வரி விதித்தும், தொழில்நுட்ப நிறுவனங்களை குறிவைத்தும் அமெரிக்கா இயற்றியுள்ள புதிய சட்டத்தினால், இந்தியாவில் உள்ள ஐ.டி., தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டை கோபுர கட்டடங்கள் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டதால் உலக வாணிபம் பாதிக்கப்பட்டது. கட்டட இடிபாடுகளை அகற்ற பெரும் தொகை செலவானது. இந்த செலவை சமாளிக்கவும், கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், நஷ்டஈடு கொடுக்கவும் பெரும் நிதி தேவைப்பட்டது.இதை சமாளிக்க புதிய உடல்நல பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

“ஜேம்ஸ் சட்ரோகா 9/11 உடல்நலன் மற்றும் நஷ்டஈடு சட்டம் 2010′ என்ற அந்த சட்டம், கடந்த வாரம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது.இதன் காரணமாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 430 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் பொருட்கள் மீது வரி மற்றும் சேவை வரி விதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

“அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவிற்கு வருகை தந்தபின், இங்குள்ள ஐ.டி., நிறுவனங்களின் நிலை மேம்படும் என்று கருதினோம். இந்நிலையில், இறக்குமதி பொருட்களுக்கு 2 சதவீதம் வரி மற்றும் உடல்நல பாதுகாப்புக்கான சட்டம் இயற்றி இருப்பது இந்த தொழிலை மிகவும் பாதிக்கும். இந்த சட்டம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் தான், அதாவது 2015 வரைக்கும் அமலில் இருக்கும் என்று கூறியிருப்பது மட்டும் தான் இந்த சட்டத்தில் உள்ள ஒரே ஆறுதல்’ என்று கூறியுள்ளார் விப்ரோ நிர்வாக துணைத் தலைவர் சுரேஷ் சேனாபதி.

“அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலானதால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால், வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த நிலையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் அமெரிக்க அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், அவர்களின் பார்வை, துரதிஷ்டவசமாக அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்களின் மீது படிந்துள்ளது. மேலும், இந்திய ஐ.டி., தொழிலை நசுக்கும் வகையில், அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது’ என்று இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

“இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்காவில் வரி விதித்திருப்பது, இந்திய ஐ.டி., தொழில் நிறுவனங்களை வெகுவாக பாதிக்கும். எனவே, இந்திய ஐ.டி., நிறுவனங்களின் நிலை குறித்து அமெரிக்க அரசுக்கு தெரிவித்துள்ளோம். இந்த மசோதா குறித்து இந்திய அரசுக்கும் தெரிவித்துள்ளோம் என்று, இந்திய ஐ.டி., தொழில் நிறுவனங்கள் அமைப்பான நாஸ்காம் தலைவர் சாம் மிட்டல் தெரிவித்துள்ளார்.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s