காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன்!

காமன்வெல்த் விளையாட்டு ஊழல் தொடர்பாக அப்போட்டி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.

ஜனவரி 3-ம் தேதிக்குப் பின் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராவதாக கல்மாடி பதிலளித்துள்ளார் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரித்துள்ளன.

காமன்வெல்த் விளையாட்டு ஏற்பாடுகளையும், மைதான வடிவமைப்பு உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியது.

லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் ஜோதி ஓட்டம் நிகழ்ச்சியில் நிதியை முறைகேடாக செலவிட்டது உள்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து கல்மாடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிகிறது.

தவிர கல்மாடியின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், கம்ப்யூட்டர்களில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கல்மாடி எம்.பி.யாக இருப்பதால் அவரிடம் விசாரிப்பதற்கு மக்களவைச் செயலரிடம் ஏற்கெனவே சி.பி.ஐ. அனுமதி பெற்றுவிட்டது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 8,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விஷயத்தில் கல்மாடிக்கு ஆதரவு அளிக்க முடியாது என்று காங்கிரஸ் ஏற்கெனவே கூறிவிட்டது. இந்நிலையில் கல்மாடி மீதான சி.பி.ஐ.-யின் பிடி மேலும் இறுகிவருகிறது.

முன்னதாக கல்மாடிக்கு நெருக்கமான காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு பொதுச் செயலர் லலித் பானோத், இணை பொது இயக்குநர் ஆர்.கே.சச் ஷெட்டி, கல்மாடியின் அரசியல் ஆலோசகர் மனோஜ் போரி ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் போட்டி தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் ஏற்கெனவே மாயமாகிவிட்டன.

இந்நிலையில் கல்மாடி இப்போதும் காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருக்கிறார். இது வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருக்கும். எனவே கல்மாடியை பதவி நீக்க செய்ய வேண்டுமென மத்திய அரசிடம் சி.பி.ஐ. வலியுறுத்தியுள்ளது.

சமீபத்தில் தில்லி, மும்பை, பூனாவில் உள்ள கல்மாடியின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது நினைவுகூரத்தக்கது.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s