16 வயது சிறுமிகளில் 3000 பேர் கர்ப்பிணிகள்!

இலங்கையில் வருடாந்தம் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளில் சுமார் 3000 பேர் கர்ப்பிணிகளாகுவதாக குடும்பநல சுகாதார பிரிவின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் நில்மினி ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்களின்படி, வருடாந்தம் இலங்கையில் 380,000 – 420,000 பேர் கர்ப்பம் தரிக்கின்றனர். அவர்களில் இளம்பராய கர்ப்பிணிகளின் எண்ணிக்கை 25000 ஆகும். இவர்களில் 7.2 சதவீதமானோர் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் 10 சதவீதமானோர் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் டாக்டர் நில்மினி ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வேண்டப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காக சிறுமிகளுக்கான உளவியல் அபிவிருத்தி மற்றும் விழிப்புணர்வு திட்டங்களை குடும்பநல சுகாதாரப் பிரிவுடன் இணைந்து சுகாதார அமைச்சு ஆரம்பித்துள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு 6 ஆம் தரத்திலிருந்து இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

சிறுமிகள் இத்தகைய நிலையை எதிர்கொள்வதை தடுப்பதற்கு ஆசிரியர்கள் – பெற்றோர்களுக்கிடையிலான நல்லுறவு, சிறார்களுக்கு மேலும் ஆன்மீக சூழலை ஏற்படுத்துதல், பெற்றோர்கள் முன்னுதாரணமாக விளங்குதல் என்பவை அவசியமானதாக கருதப்பட வேண்டும் என டாக்டர் ஆயிஷா லொக்குபாலசூரிய தெரிவித்துள்ளார்.

(pat)

Leave a comment