site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

மலையாளிகளுக்கு மது ஆர்வம் அதிகரிப்பு!

Posted by sambala87(சூரியன்) on December 29, 2010

கேரள மாநிலத்தில் , உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனை, ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்யாணம், காது குத்து, துக்க சம்பவங்கள் மட்டுமின்றி, மதம் தொடர்பான விழாக்களிலும் மது விருந்து கொண்டாட்டங்கள் இப்போது முக்கிய இடம்பெறத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக, கேரளாவில் மது விற்பனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக, அம்மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் மொத்த மற்றும் சில்லறை விற்பனை மூலம், கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், 4 ஆயிரத்து 314 கோடி ரூபாய்க்கு மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன.

இதே காலக்கட்டத்தில், கடந்த ஆண்டில், 3 ஆயிரத்து 532 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. வரும் புத்தாண்டு தினத்தையொட்டி, 500 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகும் என்று எதிர்ப்பார்ப்பதாக கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, கடந்த 22 ம் தேதி முதல் 26 ம் தேதிவரை கேரளாவில் 110 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளன. இதே காலக்கட்டத்தில், கடந்த ஆண்டு விற்பனை 103 கோடி ரூபாயாக இருந்தது.டிச., 23 ல், கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மரணமடைந்தார். இதனால்,டிச. 24 ல் மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய தினம் மட்டும் மது விற்க அனுமதி இருந்திருந்தால் மேலும், 15 கோடி ரூபாய்க்கு வருமானம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மது வகைகளுக்கு மலையாளிகளிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. கடந்த பத்து மாதங்களில் விற்பனையான 149.52 லட்சம் பெட்டி மதுபான வகைகளில் 56 சதவீதம் “ரம்’ என்ற மது வகை விற்பனையாகி உள்ளது. “பிராந்தி’ 40 சதவீதம் விற்பனையாகி உள்ளது. வோட்கா வெறும் 4 சதவீதம் மட்டுமே விற்பனையானது.

கடந்த ஆண்டில், இதே காலக்கட்டத்தில், 122.43 லட்சம் பெட்டி மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. கடந்த பத்து மாதங்களில் “பீர்’ 50.08 லட்சம் பெட்டிகள் விற்பனையானது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 48.41 லட்சம் பெட்டிகள் விற்பனையானது.

 

 

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: