site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

போர் பதட்டத்தை அதிகரிக்கிறது தென்கொரியா!

Posted by sambala87(சூரியன்) on December 23, 2010

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் சமாதான முயற்சிக்கிடையே, இன்று முதல் மேலும் பல்வேறு தரை மற்றும் வான்வெளிப் போர் ஒத்திகைகளை இதுவரை இல்லாத அளவிற்கு நடத்தப் போவதாக தென்கொரியா அறிவித்துள்ளது. இதன் மூலம் போர் பதட்டத்தை மேலும் அதிகரித்து வருகிறது தென்கொரியா.

தென்கொரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறியிருப்பதாவது: வடகொரிய எல்லையில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ள போச்சியோன் என்ற பகுதியில், நாளை(இன்று) முதல் போர் ஒத்திகை நடக்கும். இதற்கு முன்பும் அங்கு இது போன்ற பயிற்சிகள் நடந்திருந்தாலும், இப்போது இதுவரை இல்லாத அளவிற்கு மிகப் பெரிய அளவில் நடக்கும். மிக அதிக எண்ணிக்கையில் 6 கே-9 ரக பீரங்கிகள் பங்கேற்கும். ஜெட் ரக போர் விமானங்களும், 800 போர் வீரர்களும் போர் ஒத்திகையில் பங்கு பெறுவர். இவ்வாறு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “வடகொரியா தனது தாக்குதலுக்கு நிச்சயம் பழி வாங்கப்படும்’ என்று ராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தென்கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான “யோன்ஹப்,’ “வடகொரியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் நமது ராணுவம் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால், இந்த தயாரிப்புகள், நமது வெளியுறவுக் கொள்கையைச் சார்ந்து இருக்க வேண்டும். அமெரிக்கா உடனான நமது உறவுகளையும், சார்பையும் குறைத்துக் கொண்டு, சீனா மற்றும் ரஷ்யாவுடன் நமது நெருக்கத்தை அதிகரிக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது. இதற்கிடையில் கிழக்கு கடற்கரையில், ஆறு போர்க் கப்பல்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் பங்கேற்கும் ஆண்டுதோறும் நடக்கும் நான்கு நாள் போர் ஒத்திகை தனியாக நடந்து வருகிறது. வடகொரியா தாக்கிய இயான்பியாங் தீவில் தென்கொரிய ராணுவம் ரோந்து சுற்றி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, இரு நாட்டு எல்லைகளுக்கிடையில் ராணுவம் நுழையக் கூடாத பகுதியாக அறிவிக்கப்பட்டதன் தென்பகுதியில் கிறிஸ்துமஸ் மரத்தை நிறுவியுள்ளது. இதனால், எந்நேரமும் வடகொரியா தன் மீது தாக்குதல் தொடுக்கலாம் என தென்கொரியா கவலை கொண்டுள்ளது.

வடகொரியா மவுனம்: தென்கொரியாவின் இந்த புதிய போர் ஒத்திகை குறித்து வடகொரியா மவுனம் சாதித்துள்ளது. மேலும், போர் பதட்டத்தில் இருந்து இரு கொரிய நாடுகளையும் திசை திருப்பி, ஆறு நாடுகள் பேச்சு வார்த்தையைத் துவக்கி பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் முயற்சி தோல்வியடையக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியாவுக்குச் சென்ற அமெரிக்காவின் சிறப்பு தூதர் பில் ரிச்சர்ட்சன், சர்வதேச அணுசக்தி ஏஜன்சி பிரதிநிதிகளை, தனது அணு உலைகளைப் பரிசோதனையிட வடகொரியா சம்மதித்துள்ளதாகக் கூறினார். ஆனால், இதற்கான தெளிவான பதில், வடகொரியாவிடம் இருந்து இன்னும் வரவில்லை. இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ், “வடகொரியா இதுகுறித்து சம்மதம் தெரிவித்த பின்னரே ஆறு நாடுகள் பேச்சு வார்த்தை துவக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

பங்குச் சந்தை பாதிப்பு: போர் ஒத்திகை அறிவிப்பு வெளியாகும் முன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தென்கொரிய நிதியமைச்சர் யூன் ஜெயுங் யுன், “இந்தப் பிரச்னைகளால் வடகொரிய பங்குச் சந்தைக்குப் பாதிப்பில்லை. தென்கொரிய பங்குச் சந்தை முன்னேற்றத்தில் தான் இருக்கிறது. அதேநேரம், முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தப் பிரச்னை ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் நாம் மறுக்க முடியாது’ என்று கூறியுள்ளார். அவரது இந்தப் பேட்டி வெளியான பின், தென்கொரிய பங்குச் சந்தையில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டது. தென்கொரியாவில் உள்ள முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் இந்தப் போர் பதட்டம் உலகச் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் தொடர்ந்து, “ரிஸ்க்’கில் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: