site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

கூகுளை மடக்க சீனா திட்டம்!

Posted by sambala87(சூரியன்) on December 23, 2010

“கூகுள்’ இணையதளத்திற்குப் போட்டியாக, சீன அரசு சொந்தமாக ஒரு “தேடுபொறி’ இணையதளத்தைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் சீனாவின் இணையதளக் கட்டுப்பாட்டை தன் பிடியில் வைத்துக் கொள்ள சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவில், “கூகுள்’ இணையதளம் தன் சேவையைத் துவங்கிய போது அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது.

“கூகுள்’ மூலம் சீன மக்களிடம் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விடுமோ என்று பயந்த சீன கம்யூனிஸ்ட் அரசு, கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பல செய்திகளை தணிக்கை செய்த பின்பே வெளியிட வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது. தொடர்ந்து, சில இணையதள திருடர்களை நியமித்து “கூகுள்’ இணையதளத்தில் இருந்து தகவல்களையும் திருடியது. இதனால் வெறுப்படைந்த “கூகுள்’, தணிக்கையில்லாமல் செய்திகளை வெளியிடுவதற்காக, தன் சேவையை ஹாங்காங்கிற்கு மாற்றியது. இந்நிலையில், சமீபத்தில் “கூகுள்’ இணையதளத்தின் உரிமத்தை சீன அரசு புதுப்பித்தது. தொடர்ந்து “கூகுள்’ தனது தேடுபொறி மட்டுமல்லாமல், வரைபட இணையதளச் சேவையையும் துவக்கியது.

எனினும் சீன இணையதளப் பயன்பாட்டில் மிகக் குறைந்த இடத்தைத்தான் அதனால் பிடிக்க முடிந்தது. இந்நிலையில், “கூகுளுக்கு’ மரண அடி கொடுப்பதற்காக, சீன அரசு சொந்தமாக, எணிண்ணி.ஞிண என்ற “தேடுபொறி’ இணையதளத்தைத் துவங்கியுள்ளது. சீன ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையான “பீப்புள் டெய்லி’ தான் இந்த இணையதளத்தைத் துவக்கியுள்ளது. சீனாவின் 42 கோடி இணையதளப் பயன்பாட்டாளர்களைத் தன் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கையில் இந்த இணையதளம் இறங்கியுள்ளது.

மேலும், சீனாவில் இயங்கி வரும், இணையதள செய்தி உலகத்தைத் தன் பிடியில் வைத்துக் கொள்ளும் சீன அரசின் மற்றொரு முயற்சி தான் இது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கனவே, “கூகுள்’ வரைபட இணையதளத்திற்குப் போட்டியாக சீன அரசு, சொந்தமாக ஒரு வரைபட இணையதளத்தைத் துவக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: