சச்சின் கிரிக்கெட் வீரர் கிடையாது….

தலைப்பை பார்த்து தவறாக நினைத்துவிட வேண்டாம். இதை முழுவதும் படித்ததும் உங்களுக்கு அதற்க்கான விடை கிடைக்கும் .

கருத்துக்கணிப்பில் பிராட்மேனை முந்தினார் சச்சின்

சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கருத்துக்கணிப்பில் ஆஸ்திரேலிய வீரர் மறைந்த சர் டொனால்ட் பிராட்மேனை, சச்சின் டெண்டுல்கர் முந்தினார்.

மெல்போர்னிலிருந்து வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிகை இந்த கருத்துக்கணிப்பை ஆன்-லைனில் நடத்தியது. இதில் சச்சின் டெண்டுல்கர் 67 சதவீத வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தார். பிராட்மேனுக்கு 33 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இந்த கருத்துக்கணிப்பில் 20,768 ரசிகர்கள் பங்கேற்றனர்.

சச்சினிக்கு பாகிஸ்தான் பத்திரிகை புகழாரம்

நவீன கால பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று பாகிஸ்தான் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் “டான்’ பத்திரிகை தனது தலையங்கத்தில் சச்சினின் சாதனையைப் பாராட்டியுள்ளது.

கிரிக்கெட்டில் நீண்ட காலமாக விளையாடி பல்வேறு சாதனைகளை அவர் படைத்து வருகிறார். அவருடைய சாதனைக்கு நிகர் யாரும் இல்லை. அறிவியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் தாண்டியும் அவர் சாதனைகளைப் படைத்து வருகிறார்.

அவருடைய சாதனைகள் கிரிக்கெட் மீது அவர் வைத்துள்ள ஈடுபாட்டைச் சொல்லும். 20 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும் சச்சின், கிரிக்கெட் உலகை ஆல்வதில் வியப்பில்லை.

நவீன கால பிராட்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று அந்தப் பத்திரிகை புகழாரம் சூட்டியுள்ளது.

சச்சினை பற்றி வாசிம் அக்ரம்

1989-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார் சச்சின். அப்போதே எனக்கும், எனது அணி வீரர்களுக்கு இந்த வீரர் நிச்சயம் மிகப்பெரிய சாதனைகள் படைப்பார் என்று தோன்றியது. இதற்கு காரணம் அந்த 16 வயதிலேயே அவர் அவ்வளவு துணிச்சலுடன் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொண்டதுதான். அந்த அவருடைய தைரியத்தைப் பார்த்து எங்களுக்கு அப்படித்தான் தோன்றியது. சிறப்பாக விளையாட அவர் செய்த முயற்சிகளை முதல் போட்டியிலேயே நாங்கள் பார்த்தோம்.

இந்திய கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்தான் சச்சின். கடந்த 21 வருடங்களில் அவர் விளையாடிய ஆட்டங்களை இதற்கு சான்று. அவரது 50-வது சதம் கிரிக்கெட்டுக்கு அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் என்பதை உறுதி செய்கிறது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-வது சதம் எடுத்ததற்கு ஏன் இத்தனை பரபரப்பு எல்லோரிடத்திலும் இருக்கிறது என்பது புரியவில்லை.

இத்தனை வருடங்களாக அவர் விளையாடுவதை பார்த்து வருகிறேன். கிரிக்கெட் வரலாற்றின் அவர்தான் சிறந்த வீரர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. சர் டொனால்ட் பிராட்மேன் விளையாடும்போது அவருடைய சாதனைகளை யாரும் சமன் செய்ய முடியாது என்று கூறினர். அதேபோல சுனில் கவாஸ்கள் 34 சதங்களைக் குவித்தபோது அவருடைய சாதனைகளை உடைக்க முடியாது என்று கூறினர். ஆனால் சச்சினின் இந்த 50 சத சாதனையை, யாராலும் அவ்வளவு சீக்கிரம் உடைத்து விட முடியாது.

37 வயதிலும் அவர் பழைய துடிப்போடு விளையாடி வருகிறது. விரைவில் சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார் என்று தெரிகிறது. இந்த சாதனையை நம்மால் நினைத்து மட்டுமே பார்க்க முடிகிறது. இதெல்லாம் சச்சினுக்கு மட்டுமே சாத்தியம்.

1989-ல் பாகிஸ்தானுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் வந்தது. அப்போதுதான் பள்ளிகள் அளவிலான கிரிக்கெட்டில் வினோத் காம்ப்ளியுடன் இணைந்து சச்சின் உலக சாதனை புரிந்த சமயம். இதனால் அந்த இளம் வீரர், பாகிஸ்தானுடன் எப்படி மோதப் போகிறார் என்ற செய்திகள் ஊடகங்களில் வலம் வந்தன.

முதல் டெஸ்டின்போது நான் பந்துவீசினேன். இதில் அவருக்கு முகத்தில் அடிபட்டது. கன்னத்திலிருந்து ரத்தம் வழிந்தபோது அதை துடைத்துக்கொண்டு விளையாடினார். 50 ரன்களுக்கு மேல் குவித்தார். அப்போதே அவருக்கிருந்த தைரியத்தை நான் கணித்துவிட்டேன். சரி…. இவரிடம் அசாத்திய திறமை இருக்கிறது என உணர்ந்து கொண்டேன்.

அதைத் தொடர்ந்து நடந்த காட்சிப் போட்டியில் பாகிஸ்தான் ஜாம்பவான் அப்துல் காதிரின் பந்துவீச்சில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் விளாசினார் சச்சின். பந்துவீச்சில் எந்த ஜாம்பவானையும் நிலைகுலையச் செய்பவர் அவர்.

ஆனால் அவர் ஒரு மேட்ச் வின்னர் இல்லை என்று சிலர் சொல்லும்போதும், பத்திரிகையில் எழுதும்போது நான் சிரித்துக் கொள்வேன். அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருப்பவர் சச்சின். அந்த அளவுக்கு மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராகத் திகழ்கிறார்.

இந்தியா, பாகிஸ்தான் விளையாடிய ஆட்டங்களில் நான் விளையாடியபோது பல முறை சச்சினை, கவனித்திருக்கிறேன். ஆட்டத்தின் முடிவு, இந்தியாவுக்கு எதிராக செல்லும்போது அவர் சோகத்துடன் இருப்பார். அதேபோல அவர் அந்த ஆட்டத்தில் சரியாக விளையாடவில்லையென்றாலும் அவர் சோகத்துடனே இருப்பார். ஆனாலும் அவர் விளையாட்டு ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ள மாட்டார். அதே நேரத்தில் இந்தியா வெற்றி பெறும்போது அவரின் முகத்தைப் பார்க்கவேண்டும். அத்தனை பிரகாசமாக இருக்கும். அந்த அளவுக்கு கிரிக்கெட்டை நேசிப்பவர் அவர். 1999-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. சச்சின் அந்த போட்டியில் சதமடித்தும் இந்தியா தோல்வி கண்டது. அப்போது சச்சின் இருந்த மன நிலையை என்னால் உணர முடிந்தது.

இப்போது கிரிக்கெட் வரலாற்றில் முழுமையான பேட்ஸ்மேனாக இருக்கிறார் சச்சின். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அவர் ரன் குவிப்பதைப் பார்த்தாலே தெரிகிறது…அவருக்கு கிரிக்கெட் மீதிருக்கும் ஆர்வம். அந்த அளவுக்கு கிரிக்கெட்டுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.

என்னுடைய புத்தகத்தில் சச்சினுக்கு எப்போதும் மிகவும், மிகவும் சிறப்பான பேட்ஸ்மேன் என்ற இடம் உண்டு.

அவருக்கு இப்போது 35 வயதுக்கு மேலாகிவிட்டது. இப்போது கிரிக்கெட் வாரியமும், தேர்வுக் குழுவினரும் செய்யவேண்டிய காரியம் ஒன்றுமட்டும். அவர் இன்னும் எவ்வளவு காலம் கிரிக்கெட் விளையாட வேண்டுமோ…அவ்வளவு காலம் அவருக்கு வாய்ப்பு தரவேண்டும்.

அவர் ஓய்வு பெறவேண்டும் என்று யாரும் சொல்லத் தேவையில்லை. அவருக்குத் தோன்றும்போது அவரே விலகுவார்.

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன். அவர் ஓய்வு பெறும் தினம், ஏராளமான ரசிகர்களை, கிரிக்கெட் இழக்கப் போகிறது என்றார் அவர்.

இது போல கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆன சச்சின் கிரிக்கெட் வீரர் அல்ல., கிரிக்கெட் வீரர்களின் கடவுள் என்றே சொல்லலாம்.

(di)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s