site4any

Free downloadable Tamil & Tamil dubbed movies, Free Tamil books & News, Articles, Health tips…

நித்தியானந்தா காட்சிக்கு கத்தரி போட்ட சென்சார்!

Posted by sambala87(சூரியன்) on December 21, 2010

பிரபல சாமியார் நித்தியானந்தா நடிகை ரஞ்சி‌தாவுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில், அந்த சம்பவங்களை காட்சியாக்கி கல்லா கட்ட நினைத்த புதுப்பட குழு, தங்கள் படத்தில் நித்தியானந்தா தொடர்பான காட்சிகளை வைத்திருந்தனர். வில்லாளன் என்ற பெயரில் உருவாகியிருக்கும் அந்த படத்தை தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., கண்டோன்மெண்ட் சண்முகம் தயாரித்துள்ளார். வெற்றிவேல் – சூரியன் ஆகியோர் இயக்கியுள்ளனர். நாயகனாக புதுமுகம் வெற்றிவேலும், நாயகியாக புதுமுகம் சுஷ்மிதாவும் நடித்துள்ளனர்.

ரீலிசுக்கு தயாராகியிருக்கும் இப்படம் சென்சார் சான்றிதழுக்காக சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள், நித்தியானந்தா, காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் ஆகியோரை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகளை நீக்கச் சொன்னார்கள். படக்குழுவினர் எவ்வளவோ‌ கேட்டும் காட்சிகளை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. இதையடுத்து நித்தியானந்தா, ‌தேவநாதன் தொடர்பான காட்சிகள் நீக்கப்பட்டன.

இதுபற்றி படத்தின் டைரக்டர்கள் வெற்றிவேல், சூரியன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியில், சாமியார் நித்யானந்தா மற்றும் அர்ச்சகர் தேவநாதன் காட்சிகளை ஒரு பாடலில்தான் வைத்திருந்தோம். அதை தணிக்கை குழுவினர் அனுமதிக்காமல் வெட்டி நீக்கி விட்டனர், என்றனர்.

(dm)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

 
%d bloggers like this: