“விக்கிலீக்ஸ்’ ஜூலியன் எங்கே?

“விக்கிலீக்ஸ்’ இணையதளத்திற்கு, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் இன்னும் ஒரு வாரத்தில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க வெளியுறவுத் துறை கொள்கை பற்றிய ரகசிய ஆவணங்களை, “விக்கிலீக்ஸ்’ இணையதளம் சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. இதனால், அமெரிக்காவுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது. அந்த ரகசிய ஆவணங்கள் மூலம், பிரான்ஸ் அதிபர் சர்கோசி, பாக்., அதிபர் சர்தாரி, ஈரான் அதிபர் அகமது நிஜாதி, லிபியா அதிபர் கடாபி போன்றோரை பற்றி தனிப்பட்ட முறையில் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பேசிய கேலி கிண்டல்கள் வெளியுலகுக்கு தெரியவந்தன. அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான, பிரிட்டன், சவுதி, இஸ்ரேல், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்றவை இந்த வெளியீட்டை கண்டித்தன.அமெரிக்க தரப்பில் கடும் கண்டனத்தை வெளியிட்ட வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், “இந்த தாக்குதல் அமெரிக்கா மீதானதல்ல; உலக நாடுகளின் மீதானது’ என்று குறிப்பிட்டார்.

இதற்கிடையில், ஜூலியன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக சுவீடன் நாட்டு கோர்ட் ஒன்று அவரை கைது செய்ய, “இன்டர்போல்’ மூலம் உத்தரவிட்டது. கடந்த வாரம், “இன்டர்போல்’ போலீஸ், தனது இணையதளத்தில், ஜூலியனைத் தேடுவதற்கான “ரெட் நோட்டீசை’ வெளியிட்டது.இந்நிலையில், “விக்கிலீக்ஸ்’ இணையதளம், பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் தொடர்ந்த நெருக்கடியால், அந்த இணையதளத்துக்கு சேவை அளித்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த, “அமேசான்’ நிறுவனம், அதற்கான “டொமைனை’ ரத்து செய்வதாக அறிவித்தது. நிறுவனத்தின் விதிமுறைகளை மீறி “விக்கிலீக்ஸ்’ நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக “அமேசான்’ தெரிவித்தது. இதனால், உலகம் முழுவதுமான “விக்கிலீக்ஸ்’ சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டது.இதனால், சுவீடன் நாட்டில் இருந்தபடி இயங்குவதற்கு வசதியாக, “பேன்ஹாப் ஏ.பி.,’ என்ற நிறுவனத்தில் “விக்கிலீக்ஸ்’ நிறுவனம் தனது சேவையை மாற்றியது. அதனால், அதன் இணையதள முகவரியும் மாற்றப்பட்டது. பிரான்ஸ், தனது நாட்டில் “விக்கிலீக்ஸ்’ இணையதளத்தை முடக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இந்த நேரத்தில், “விக்கிலீக்ஸ்’ இணையதளத்திற்கு நன்கொடை வசூலித்து கொடுக்கும் சேவை அளித்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த “பேபால்’ நிறுவனமும், அமெரிக்க அரசின் நெருக்கடி காரணமாக, தன் சேவையை ரத்து செய்து விட்டது.இதனால், “விக்கிலீக்ஸ்’ தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரிட்டனில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஜூலியன் சமீபத்தில் தனது இணையதளத்தில் அளித்துள்ள பேட்டியில், “வல்லரசான அமெரிக்காவுடன் மோதுவதால் எனது பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு கொலை மிரட்டல்கள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி விரைவில் வழக்கு தொடுப்பேன்’ என்று கூறினார்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து வெளிவரும், “டைம்ஸ்’ இதழ், ஜூலியன் இன்னும் ஏழு நாட்களுக்குள் கைது செய்யப்படலாம் என போலீசார் கூறியதாக தகவல்களை வெளியிட்டுள்ளது. இதனால், இப்போது உலகளவில் தேடப்படும் நபரான ஜூலியன் குறித்த பரபரப்பு அதிகமாகியுள்ளது.

(dm)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s